டெங்கு

‘ஏடிஸ்‘ என்னும் கொசுக்களில் பலவகைகள் உள்ளன. இதில் ஏடீஸ் ஏஜிப்டை, அல்போபிக்டெஸ் ஆகிய 2 வகையான கொசுக்கள் கடித்தால் மட்டுமே டெங்கு காய்ச்சல் வரும். மனிதர்களை போலவே ஆண், பெண் கொசுக்கள் உள்ளன. இதில் ஆண் கொசுக்கள் மனிதன் மற்றும் விலங்குகளை கடிப்பதில்லை. செடி, கொடிகளில் உள்ள சத்தினை உறிஞ்சி அவைகள் உயிர் வாழ்கின்றன.
பெண் கொசுக்கள் கடிப்பது ஏன்?
பெண் கொசுக்கள் மட்டுமே மனிதன், விலங்குகளை கடிக்கின்றன. இனப்பெருக்க காலத்தில் கொசுக்களின் வயிற்றில் உள்ள முட்டைகள் முதிர்ச்சி அடைவதற்கும், நல்ல வளர்ச்சி பெறுவதற்கும் புரதச்சத்து தேவைப்படுகிறது. இதற்காகவே மனித, விலங்கு ரத்தை உறிஞ்சி புரதச்சத்தை கொசுக்கள் எடுத்து கொள்கின்றன.
அதிலும் கழிவுநீர் ஓடையில் உற்பத்தியாகும் கொசுக்களால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்த கொசுக்கள் கடித்த சிறிதுநேரம் அரிப்பு, தடிப்பு மட்டுமே ஏற்படும். ஆனால் நல்ல தண்ணீரில் உருவாகும் கொசுக்கள் கடிப்பதால் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஒரு மில்லி நல்ல தண்ணீர் இருந்தால் கூட, அதில் முட்டையிட்டு கொசுக்கள் உற்பத்தியாகி விடும்.
கொசுக்களின் பறக்கும் திறன்
பெரிய தொட்டிகளில் சேகரித்து வைக்கிற தண்ணீர் மட்டுமின்றி, ஒரு சிறிய பாட்டில் மூடியில் நல்ல தண்ணீர் தேங்கினால் கூட கொசுக்கள் உற்பத்தியாகி விடும். முட்டையிட்டு, புழுக்களாகி ஒரு வாரகாலத்துக்குள் கொசுக்களாக பறக்க தொடங்கி விடும். எனவே தண்ணீர் பிடித்து வைக்கிற பாத்திரங்களை 6 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.
குளிர்ச்சியான, இருட்டான இடங்களில் கொசுக்கள் வசிக்கும். பகல் நேரத்தில் ஏடீஸ் கொசு கடிக்கும். ஒரு கொசு, சுமார் 400 மீட்டர் தூரம் வரை பறக்கும் திறன் கொண்டதாகும். 40 அடி உயரத்துக்கு மேலாக பறக்கும். எனவே நம்முடைய வீட்டை மட்டுமின்றி, அக்கம்பக்கத்தினர் வீட்டிலும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்தால் மட்டுமே டெங்குகாய்ச்சலில் இருந்து தப்பிக்க முடியும். மாணவ–மாணவிகள் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு நகர்நல அலுவலர் அனிதா பேசினார். இந்த கண்காட்சியை ஏராளமான மாணவ–மாணவிகள் பார்வையிட்டனர்.

கொசு கடித்தால் தடித்து அரிப்பது ஏன்

கொசு கடித்து ரத்தத்தை உறிஞ்சும்போது இரத்தம் உரையாமலிருக்க ஒரு திரவத்தை அது நம் தோலில் துப்புகிறது. நம் உடம்புக்கு அந்த்த் திரவம் அன்னியப் பொருளானதால் உடம்பு அதை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்க்கிறது. அந்த ஒவ்வாமையின் விளைவுதான் தோல் தடிப்பதும் அரிப்பு ஏற்படுவதுமாகும்

Leave a Reply