ஜூனியர் உலக துப்பாக்கி- அஜர்பைஜான்

ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீரர் ருஷிராஜ் தங்கம் வென்றார்

அஜர்பைஜான் – ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதலில் 25 மீட்டர் ரெபிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ருஷிராஜ் தங்கம் வென்றார். ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் 25 மீட்டர் ரெபிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ருஷிராஜ் ரோத் தங்கம் வென்றார். 6 பேர் பங்கேற்ற இறுதிப் போட்டிக்கு அவர் 5-வது இடத்தை பிடித்து முன்னேறி தங்கம் வென்று அசத்தி உள்ளார்.

10 மீட்டர் ஏர் ரைபிள் ஆண்கள் அணி பிரிவில் இந்தியாவின் பிரதிக் போர்ஸ், அர்ஜுன் பாபுதா, பிரசாந்த் ஆகியோரை கொண்ட அணி 1849.9 புள்ளிகள் எடுத்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்தியா 6 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என 18 பதக்கம் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 10 தங்கம் உள்ள 21 பதக்கங்களுடன் ரஷியா உள்ளது.

Leave a Reply