சிலிர்க்கும் ரோமம்

ஆரம்ப காலத்தில் நம் உடல் முழுவதும் ரோமங்கள் இருந்தன. பூனை போன்ற சில மிருகங்கள் அதீத பயத்தில் இருக்கும்போது அதன் உடல் முழுவதும் ரோமங்கள் சிலிர்த்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.

அதாவது எதிரி வரும்போது என் உடம்பு இன்னும் பெரிசு என்று காட்டிக்கொண்டே பயப்படுகிறதாம். இந்தப் பழக்கம் தான் தொன்று தொட்டு வந்துள்ளது.

அதனால் தான் நமக்கும் சில நேரங்களில் ரோமம் சிலிர்த்துக் கொண்டு விடுகிறது. நல்ல குளிர் அல்லது பயத்தின்போது நம் உடலில் உள்ள ரோமங்கள் குத்திட்டு நிற்பதைக் காணலாம்.

அப்போது, சருமத்துக்கு கீழ் இருக்கும் அர்ரெக்டேஸ் பைலோரம் என்ற தசை இறுக்கமாகிறது. இதனால் சருமம் இழுக்கப்பட்டு, மயிர்கால்கள் நிற்கத் துவங்குகின்றன.

Leave a Reply