சிடுகா வைத்தியம்

   திடீர் மூர்ச்சை மயக்கம் தீர சிடுகா மருத்துவம்

அபஸ்மாறம் என்பார்கள். ஹிஸ்டீரியா என்றும் இதற்கு ஆங்கில 
பெயர். நடந்துகொண்டே இருப்பார்: திடீரென்று கீழே விழுந்து விடுவார்.
பிணம் போலாகி கை கால்களை இழுப்புப் போல் இழுக்கச் செய்து சில
நிமிடம் முதல் பல மணி வரையில் இருக்கும். இந்த மாதிரியான திடீர்
மூர்ச்சைக்கெல்லாம் அந்த காலத்தில் என்ன சிகிச்சை இருந்தது.
ஊசியா, மாத்திரையா, எதுவும் கிடையாது. ஆனாலும் இந்த மூர்ச்சை
உடனே தெளிய இரண்டு மூன்று  “ சிடுகா ” மருத்துவ முறையை அந்த
காலத்து மாமனிதர்கள் தெரிந்து வைத்திருந்தன. 

          நடைபாதையில் மயங்கி விழுந்தவரைஅந்த காலத்தில் சும்மா
வேடிக்கைப் பார்த்துவிட்டு, அந்த ஆஸ்பத்திரிக்கு தூக்கிப் போ!இங்கு
போ, அங்கு போ என்று சொல்ல மாட்டார்கள் இந்த காலத்து நாகரீக
மனிதர் போல!  உடனே ஒரு  சிடுகா வைத்தியம்- அடுத்த நிமிடமே
மூர்ச்சையானவர் எழுந்து நடக்க ஆரம்பித்து விடுவார்.அப்படி
இருந்த நாடுதான் நம் நாடு!! இப்படி செய்யும் வைத்தியத்தில் ஒன்று
தான்  மிளகு சேரும் முறை ஒன்று  இதை இன்றும் நீங்கள் அம்மாதிரி
மூர்ச்சையால் விழுந்தவர்க்குச் செய்யலாம்.

                                           வைத்திய முறை

         இரண்டே மிளகு,  ஒரு கம்மார்வெற்றிலை என்ற கருப்பு வெற்
றிலை  சோற்று உப்புக்கல் நான்கு  இவைகளை இடது  உள்ளங்கை
யில் வைத்து வலதுகை பெருவிரலால் நன்கு அழுத்தி அழுத்தி நசுக்கி
கசக்க வேண்டும். இப்படி கசக்கும் போது  மூன்றும் நன்றாக உறவாகி
அதிலிருந்து நீர் கசியும். ஒருவர் மூர்ச்சையானவருடைய கண்களை
நீக்கி திறக்கச் செய்து அந்த நீரை இரண்டு துளி இரு கண்களிலும் 
விட்டு பேசாமல் இருக்க வேண்டும். அடுத்த நிமிடமே  மூர்ச்சை
ஆனவர்க்கு  ( ஆவி உடலை விட்டுப் பிரிந்து போய் இருப்பினும் கூட)
ஆ! ஊ! என்று கத்திக் கொண்டு உடனே எழுந்து உட்கார்ந்து கண்களைக்
கசக்க ஆரம்பித்து விடுவார். கைகளைப் பிடித்துக் கொண்டு கண்களை
கசக்காமல் வைத்து இருக்க சில  நிமிடங்கள் கழித்து தானே எழுந்து 
நடக்க ஆரம்பித்து விடுவார். அதி அற்புத  முறை! பழங்காலத்து எளிய
முறை. எங்கும் சுலபமாக கிடைக்கும் பொருள்கள் இவை மூன்றும். 

இதைத் தேரையர் என்ற சித்தர் மக்களுக்காக சொல்லி வைத்தார்.

                                   “ மண்ணில்  வேந்தனும்
                                                 மாமலை  முனிவனும்   
                                      உண்ணும்  சோற்றுக்கு  உருசியான்வனும்
                                                 கண்ணில்  கசக்கிப் பிழிந்திட
                                     விண்ணில்  ஏறிய உயிர்  மீண்டும்
                                                 மண்ணிற்கே  திரும்புமே!”

        மூர்ச்சையால் நீங்கிய உயிர் மீண்டும் வரும் என்பது பாடலின்
கருத்து.

         வேந்தன் — வெற்றிலை,  முனிவர் — மிளகு, சோற்றுக்குருசி –உப்பு
இவைகள் இல்லாத வீடேதமிழ் நாட்டில் இருப்பது அரிது. இம் மாதிரி
மூர்ச்சை சம்பவங்கள் உங்கள் வீட்டருகே நிகழ்ந்தால் நீங்கள் சும்மா
இருக்காதீர்கள்! நீங்கள் மேல்கண்ட சிகிச்சையை தைரியமாக, பொரு
மையாக செய்து ஆளை நடக்க வைத்து அனுப்பி விட்டு வீட்டுக்கு
வந்து தனிமையாக நீங்கள் வணங்கும் தெய்வத்திடம் அந்தப் பெருமை
யையும், புண்ணியத்தையும்  அர்பணம் செய்து விடுங்கள்! நம் நாடு
அந்நிய நாகரீக  மருத்துவ முறைககளில் இருந்து விடுபட வேண்டும்.
நம் நாட்டு மருத்துவம் பாரம்பரிய சித்த வைத்திய முறையை எற்றுப் பார்த்தால்  நோய் வருமுன் சரி செய்யலாம்.

Leave a Reply