கோழி பார்வை

கோழிகளின் விழித்திரை மனிதனின் விழித்திரையை விட வண்ணங்களை பகுத்துணரும் சக்தி மிக்கது, என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.வாஷிங்டன் பல்கலைக் கழக விஞ்ஞானி ஜோசப் கார்போ இது குறித்து கூறியதாவது: மனிதனின் விழித்திரையை விட பறவைகளின் விழித்திரை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
இதனால் தான் வானத்தில் வட்டமிடும் கழுகு கீழே கிடக்கும் சிறிய சுண்டெலியை கூட கூர்ந்து பார்த்து வேட்டையாடுகிறது. பாலூட்டிகள், பறவைகள் எல்லாம் ஒரே மூதாதையரை கொண்டவை. டைனோசர் உள்ளிட்ட ராட்சத விலங்குகள் கூட இரவில் வேட்டையாடும் குணம் கொண்டவையாக இருந்தவை. கும்மிருட்டிலும் கூட சுற்றுப் புறங்களை தெளிவாக பார்க்கும் திறன் வாய்ந்தவையாக இருந்தன. நாளடைவில் இந்த பழக்கம் பகலில் வேட்டையாட துவங்கியதும் மங்க துவங்கி விட்டது. ஆனால், இந்த விசேஷ குணத்தை பறவைகள் இன்று வரை கட்டி காக்கின்றன.
குறிப்பாக, கோழிகள் அதை விட கோழி குஞ்சுகளுக்கு வண்ணங்களை பிரித்தறியும் வகையில் விழித்திரை பிரமாதமாக உள்ளது. மனிதனை பொறுத்தவரை சிகப்பு, நீலம், பச்சை வண்ணங்களை கூர்ந்து அறிய முடிகிறது. ஆனால், கோழிக்குஞ்சுகளின் விழித்திரை புறஊதா கதிர்களை கூட பகுத்துணரும் தன்மை வாய்ந்தவை.இதனால், தான் கோழிகள் தனது இணையை அதன் இறகுகளை வைத்து அடையாளம் காண்கின்றன.
இதேபோன்ற குணம் மற்ற பறவைகளுக்கும் உள்ளன. இதன் காரணமாக தான் சில பறவைகள் வண்ண மிகு பழங்களை சுவைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன.மனிதர்களுக்கு 200 வகையான பாரம்பரிய குறைபாடுகளின் காரணமாக குருட்டு தன்மை ஏற்படுகிறது. கோழிக்குஞ்சுகளின் விழித்திரையிலிருந்து ஸ்டெம் செல்லை பிரித்தெடுத்து மனிதர்களுக்கு பொருத்துவதன் மூலம் குருட்டு தன்மை மற்றும் நிறக்குருடு குறைப் பாட்டை போக்கமுடியும், என நம்புகிறோம். இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. இவ்வாறு ஜோசப் கார்போ கூறினா

Leave a Reply