கோலி சொத்து மதிப்பு

*அடேங்கப்பா… கோலியோட சொத்து மதிப்பு கேட்ட குழந்தைகள நீங்களே விளையாட அனுப்புவீங்க*

இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் டிசம்பர் 11ம் தேதி திருமணம் ஆனது. இதையடுத்து அவர்களின் திருமண ஆடம்பரத்தை பார்த்து அவர்களின் சொத்து மதிப்பு விபரங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வரிசையில் கோலியின் சொத்து மதிப்பு கேட்டால் சற்று கிரக்கம் வரவழக்கின்றது.

கோலி சொத்து மதிப்பு: கோலி கிரிக்கெட்டில் முன்னனி வீரராக இருப்பதால், அவருக்கு முதல் நிலை வீரருக்கான சம்பளம் பெருகின்றார். அதோடு பல்வேறு நிறுவன விளம்பரங்களில் நடித்து வருவதோடு, ஐபிஎல் ஏலத்தில் அதிக பணம் கொடுத்து வாங்கப்படும் வீரர்களில் முன்னிலையில் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 382 கோடி ($60 மில்லியன்) இருக்கும் என தெரிகிறது.

இவர் ரூ. 42 கோடிக்கு முதலீடு மற்றும் கார்கள் வாங்கி வைத்துள்ளார்
கோலி ஒரு நாள் போட்டி ஒன்றில் விளையாட ரூ. 3 லட்சமும், டெஸ்ட் போட்டியில் விளையாட ரூ. 5 லட்சம், ஒரு டி20 போட்டிக்கு ரூ. 2 லட்சம் சம்பளமாக பெறுகின்றார்.
ஆண்டுக்கு ரூ. 28 கோடி வரிப்பணம் செலுத்தி வருகின்றார்.

கோலிக்கு மும்பையில் ரூ.34 கோடிக்கு கடலை பார்த்த படி 7,171 சதுர அடி பரப்பில் 34 மாடிகள் கொண்ட கட்டிடத்தை வாங்கியுள்ளார்.

அதே போல் இவர் ‘ஸ்கை பங்களா’ கட்டுமான நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கின்றார்.

கிரிக்கெட் வீரர்களுக்கு 100% சம்பளம் அதிகரிப்பு
தற்போது பிசிசிஐக்க வரும் ஆண்டு வருமானத்தில் 26 சதவீத்தை, வீரர்களுக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறது. வீரர்களை ஏ, பி, சி பிரிவாக பிரிக்கப்பட்டு, முறையே 2 கோடி, 1 கோடி, 50 லட்சம் என ஆண்டு வருமானமாக வழங்கப்படுகிறது.

இதில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 5.51 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்தார். தற்போது இந்த புதிய சம்பள உயர்வுக்குப் பின் 10 கோடி ரூபாய் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல், இந்திய அணியில் உள்ள அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் நூறு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply