கோடைகாலம்

அன்பான நட்புகளுக்கும், உறவுகளுக்கும் ஒரு விண்ணப்பம்.
கோடைகாலம்
ஜாக்கிரதை, தண்ணீருக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்படப் போகிறது. தண்ணீர்க் கேன் வருடம் ரூ. 5 விலை ஏறும். இளநீர் ரூ. 30-35 ஆகும், வழக்கம்போல.

முதல் வேண்டுகோள் :

1. இந்தப் பூமிப் பந்தை நம்முடன் சேர்த்து அழகாக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பறவைகள், விலங்குகள், செடிகள், கொடிகள், மரங்கள், பூக்கள் இவைகளுக்கும் வாழ்வாதாரமான நீர் வேண்டும்.
அனுதினமும் ஒரு அகண்ட மண் அல்லது தேவையற்ற பாத்திரங்களில் நீர் ஊற்றி, வீட்டின் மீது வையுங்கள். பறவைகள் தினமும் தங்களது இனிமையான கீச்சுக்குரலால், உங்களை பூபாள இராகம் பாடி, எழுப்பும். அணில் தவ்வும். உடன் தானியங்கள், மிக்ஸர், வேர்க்கடலை, சப்பாத்தி ஏதாவது ஒன்றை வீசுங்கள், பாவம் வெயிலில் உணவுக்கு எங்கே அலையும்.?!!
இவைகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்குத்தான் இருக்கிறது.

இந்தப் புண்ணியங்கள், உங்களது குழந்தைகளின் கணக்கில், வரவு வைக்கப்படும். சத்தியம்.

2. நீரிழிவு, இரத்த அழுத்த நோய், வயது மூப்பு உள்ளவர்கள் தயவு செய்து, வெயிலில் வெளியே வர வேண்டாம்.

3. பொதுவாகவே, காலை 11 மணி முதல் மாலை 3 அல்லது 4 மணி வரை வெளியே வருவதைத் தவிர்க்கும் பொருட்டு, வேலைகளைத் திட்டமிட்டு, மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்.
அப்புறம்ண்ணா, இந்தக் கண்டிஷன் நம்மிடம் பணி புரிபவர்களுக்கும் சேர்த்தே.

4. தண்ணீரையும் அளவோடு செலவழியுங்கள். ஏகத் தட்டுப்பாடு வரும். ஆழ்குழாய், கிணறு வறளும்.

5. வெளியே போகும்போது செருப்பணிந்து, கர்ச்சீப், சாக்லேட் மற்றும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலுடன் செல்லுங்கள். தண்ணீர் மற்றவர்களுக்கும், சமயத்தில் உபயோகப்பட்டு, உயிர் காக்கும்.

6. பெட்ரோல் டேங்க் முழுவதும் நிரப்பாதீர்கள், மிக ஆபத்து. காற்றுக்கு இடைவெளி இருக்கட்டும். வாகனங்களின் டயர்களில் காற்று குறையும், நிரப்பிப் பராமரியுங்கள்.

7. மின்தட்டுப்பாடு வரும். யுபிஎஸ், பேட்டரி விலை எகிறும். முடிந்தவரைப் பகலில் ஒரே அறையைப் பகிர்ந்து, ஃபேன், ஏசி பயன்படுத்துங்கள்.

8. வெந்நீர்க் குளியல் தவிர்த்து, உடலில் நீர் வறட்சியைப் போக்கிட, குளிர்ந்த நீரில் குளியுங்கள். கண்களையும், முகத்தையும் கிணறு அல்லது போர்வெல் நீர் நிரப்பிய ஒரு பாத்திரத்தில் தினமும் 3, 4 நிமிடம் மூழ்கச் செய்து, உடல் உஸ்ணத்தைக் குறையுங்கள்.

9. மாமிசம், காரம், எண்ணைப் பதார்த்தங்களைத் தவிர்த்து, நீர்ச்சத்து உள்ள பழவகைகள், சிறுதானியக் கூழ், இளநீர், வெள்ளரி, பழைய சோறு உட்கொள்ளவும். உடலில் நீர், ஆவியாகி அதிகம் வெளியேறும், தவிர்க்க பருத்தி ஆடைகள் அணியவும்.

10. ஹோட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர்த்து, தெருவோரங்களில் சுகாதாரமாக விற்கப்படும் நீர்மோர், கூழ வாங்கிக் குடிக்கவும். அங்கே தரப்படும் மிளகாய், மாங்காய்கஊ கீற்று, வத்தல் தவிர்க்கவும். நீர் கேட்பவருக்கெல்லாம், இல்லையென்று சொல்லாமல் கொடுக்கவும்.

11. அரசு பள்ளிகளில் படிக்கும் கால் செருப்பில்லாத குழந்தைகளுக்கு, தங்களால் இயன்ற அளவு வாங்கிக் கொடுத்துதவும்.

12. வழியில் ‘லிப்ட்’ கேட்போருக்கு, நம்பிக்கையிருந்தால், வாகனத்தில் இடம் கொடுக்கவும் (பகலில்).

13. தங்களுக்கும் தெரிந்த மேலான யோசனைகளையும் இத்துடன் சேர்த்து, மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்

Leave a Reply