குடும்ப அட்டை பெற என்ன செய்ய வேண்டும்

குடும்ப அட்டை பெற என்ன செய்ய வேண்டும்…

புதுமணத் தம்பதிகளுக்கு….

பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கம் செய்த சான்றிதழோடு, பூர்த்தி செய்யப்பட்ட புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பம், இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி (அ) மின்சாரக் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட் இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து தாங்கள் குடியேறி இருக்கும் பகுதியின் வட்டவழங்கல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்யவும்.

வீட்டை எதிர்த்து திருமணம் செய்த தம்பதிகளுக்கு…

தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டை எண்ணையும், திருமணப் பதிவு சான்றிதழ் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு அடையாள அட்டையை இணைந்து தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்யலாம்.

குடும்ப அட்டையை தொலைத்தவர்களுக்கு….

குடும்ப அட்டை நகல் அல்லது எண், பாஸ்போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை கொடுத்து புதிய அட்டையைப் பெறலாம்.

இதுவரை குடும்ப அட்டையே இல்லாதவர்களுக்கு…

இதுவரை என் குடும்பத்துக்கு குடும்ப அட்டையே இல்லை’ அல்லது ‘நான் பெற்றோர் இன்றி அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தேன்’ என்பது போன்ற காரணங்களுடன் இருப்பவர்கள், வெள்ளைத்தாளில் மனு எழுதி ஏரியாவின் வட்ட வழங்கல் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

புதிய பெயர் சேர்க்க…

குழந்தை பிறந்து ஓராண்டு கழித்து அதன் பிறப்புச் சான்றிதழை குடும்ப அட்டையுடன் இணைத்துக் கொடுக்க வேண்டும்.

இறந்தவர் பெயர் நீக்க…

இறந்தவரின் இறப்புச் சான்றிதழை வாங்கிய மூன்று நாட்களுக்குள் குடும்ப அட்டையுடன் இணைத்து வட்டாட்சியர் அலுவலரிடம் கொடுத்து நீக்கம் செய்யலாம்.

குடும்ப அட்டைக்கான கட்டணம்….

குடும்ப அட்டை பெற அய்ந்து ரூபாய் மட்டுமே கட்டணம்.

புகாருக்கு….

குடும்ப அட்டைக்கான மனு விண்ணப்பிக்கப்பட்டு, 60 நாட்களுக்குள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். ஏதேனும் சிக்கல் என்றால் http://www.consumer.tn.gov.in/contact.htm என்ற இணைய தளத்தில் புகார் அளிக்கலாம்.

Leave a Reply