காய்ச்சல் FEVER ஒரு நோயல்ல

உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது. நாக்கு கசந்து எதுவும் சாப்பிடப் பிடிக்கவில்லை. அலுப்பு, அமைதியின்மை, உடல் வலி, உடல் பாரம், அடித்து போட்டது போல் உடம்பு துவண்டு விடும். இதுதான் காய்ச்சலின் அடையாளம். ஒரு சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6°F (37°C).இது ஆளாளுக்கு, நேரத்திற்கு நேரம் சிறிது மாறுபடலாம். ஆனால் இது 100.5°F அல்லது அதற்கு மேலே போகும்போது அதைக் காய்ச்சல், ஜுரம் என்கிறோம். இதனை அனுபவப்படாதவர்களே இல்லை என்னுமளவு சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது.
காய்ச்சல்ஒருநோயா?
காய்ச்சல் ஒரு நோயல்ல, நமக்கு எதிரானதும் அல்ல. மாறாக நோய்க்கிருமிகளை ஒழிப்பதற்காகவும் உடம்பில் தேங்கிய கழிவுகளை வெளியேற்றவும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி போராடுவதன் பாகம் தான் காய்ச்சல். நோயுண்டாக்கும் அனேக பக்டீரியாக்களும் வைரசுகளும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால் உடல் வெப்பநிலை சிறிது அதிகமாகும்போது இந்த கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப்படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலை வைரசுகளுக்கு ஆகாது. அது மட்டுமல்ல காய்ச்சலானது நோயெதிர்ப்புத் திறனையும் அதிகப்படுத்தி அதிக வெள்ளையணுக்களையும், Antibody-களையும் உருவாக்குகிறது.
காய்ச்சல்மூளையைபாதிக்குமா?
காய்ச்சல் காரணம் குழந்தைகளின் மூளை பாதிப்படையும் என அனேக பெற்றோர்கள் வீண் பயம் கொள்கின்றனர். காய்ச்சல்களுக்கு அவ்வாறு பயப்படத் தேவையில்லை.
மருத்துவம் செய்யாவிட்டால் காய்ச்சல் அதிகரித்துக்கொண்டே போகுமா?
அப்படியில்லை. குழந்தைக்கு கனமான உடை, போர்வை போர்த்தியிருந்தாலோ, அதிக வெப்பமான சூழலில் இருந்தாலோ மட்டுமே உடல் வெப்பம் அதற்கு மேலே அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
காய்ச்சலால் குழந்தைக்கு ஜன்னி கண்டு விடும் என்று சில பெற்றோர்கள் அனாவசியமாக பயப்படுவார்கள். இது தேவையற்ற பயம். அபூர்வமாகவே அப்படி நிகழும். திடீரென்று உடல் வெப்பம் மிக அதிகமாகப் போனால் அத்தகைய நிலை உண்டாகலாம். எனவே அப்போது உடனே வெப்பத்தை குறைக்க முயல வேண்டும்.
காய்ச்சல் பெரும்பாலும் நோய்க்கிருமிகளை அழிக்கத்தான் வருகிறது என்றாலும் சிலநேரங்களில் உடம்பில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றவும் வரும். இல்லையென்றால் அந்த கழிவுகள் நம் உடலில் பல இடங்களில் தேங்கி அங்கு வலிகள் ஏற்படுவதற்கும், கேன்சர் கட்டிகளாக மாறிவிடும்.
காய்ச்சலுக்கு என்ன சிகிச்சை செய்யலாம்?
காய்ச்சலுக்கு எந்த வித சிகிச்சையும் தேவையில்லை. காய்ச்சலுக்கு தனியாக மருந்து எதுவும் இல்லை என்பதே உண்மை. சிகிச்சை என்பது உங்கள் உபாதையை குறைப்பது, வைரசுகளை எதிர்த்து போராட உடலுக்கு துணை செய்வது மட்டும் தான். போதுமான ஓய்வு இருந்தாலே போதும் தானாகவே குணமாகிவிடும்.
மருந்துகள் பாதுகாப்பானது அல்ல
காய்ச்சல் ஜலதோசத்திற்கு மாத்திரைகள் பாதுகாப்பானது அல்ல. “ஜலதோசம் மருந்து சாப்பிடாவிட்டால் 7 நாளில் குணமாகும். மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் குணமாகிவிடும்” என்று கூறப்படுவது நகைச்சுவைக்காக அல்ல. இம்மாத்திரைகள் பல சமயங்களில் தேவையற்றதாகவோ இருக்கிறது. நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இத்தகைய மாத்திரைகள் கொடுக்ககூடாது என்று FDA கூறுகிறது.
மூக்கடைப்புக்கு பயன்படும் மருந்துகளும் தற்காலிக நிவாரணம் தான் தருகிறது. தொடர்ந்து பயன்படுத்துவது கெடுதி செய்யும். அவற்றில் அடங்கியுள்ள சில இரசாயணங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரித்து இதய நோயில் கொண்டு விடும். மற்றும் புராஸ்டேட், தைராய்டு, நீரிழிவுக்கு இழுத்துச் செல்லும். மூக்கடைப்பு மருந்துகளில் காணப்படும் (PPA) பக்க வாதத்திற்கு அடிகோலும். எனவே இம்மருந்து உங்களிடமிருந்தால் தூக்கி எறிந்து விடவும்.
உறங்குவதிலோ, பேசுவதிலோ இடையூறு இருந்தால் இருமல் மருந்துகளை உபயோகிக்க வேண்டாம். சில இருமல் மருந்துகள் தூக்க கலக்கத்தை ஏற்படுத்தி கை கால்களை தள்ளாடச் செய்து விடும். சுவாசக்குழாயிலிருந்து சளியையும் கிருமிகளையும் வெளியேற்றத்தான் இருமல் உண்டாகிறது. இது நல்லது. இருமல் ஒரு நோயல்ல.
காய்ச்சல் வந்த நபருக்கு எந்த விதமான உதவிகள் செய்யலாம்?
முதலில் காய்ச்சல் வருவதைக் கண்டு பயப்படத் தேவையில்லை. ஏனென்றால் எல்லா காய்ச்சல்களுமே உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களுக்கு எதிராக நம் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்தும் பாதுகாப்பு ஏற்பாடுதான்.
காய்ச்சல் ஏற்பட்ட நபருக்கு செரிமான சக்தி குறைந்து போயிருக்கும். ஏனென்றால் உடலின் முழு சக்தியும் திரட்டப்பட்டு நோயெதிர்ப்பு வேலையில் ஈடுபட்டிருக்கும். அதனால் பசி இருக்காது. காய்ச்சல் முழுமையாக குறையும் வரை எந்த உணவையும் கட்டாயப்படுத்தி கொடுக்கக்கூடாது.
தேவையான போது தண்ணீர் கொடுக்கலாம். தண்ணீர் அருந்தும் போது குமட்டல், வாந்தி இருந்தால் வாயை நனைக்கும் அளவு தண்ணீர் கொடுத்தால் போதும்.
உதடுகள் வறண்டு காணப்படும் போது தண்ணீரால் உதடுகளை நனைத்து விடலாம்.
வெப்பம் அதிகரித்துக் காணப்படும்போது அடிவயிற்றிலும், நெற்றியிலும் ஈரத்துணியை இடலாம்.
முழு ஓய்வு அவசியம்.
தாகம் முழுமையாக ஏற்பட்ட பின்பு மெதுவாக பசியுணர்வு தெரிய ஆரம்பிக்கும். அதுவரை உணவையோ, கோப்பி தேனீர் போன்றவைகளையோ தரக்கூடாது.
பசி ஏற்பட்ட பின்பு நீர்த்த உணவுகளில் துவங்கி, அடுத்தடுத்த வேலைகளில் படிப்படியாக திட உணவுகளுக்கு வரலாம்.
இம்முறையை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பின்பற்றலாம். ஒவ்வொரு முறையும் காய்ச்சல் ஏற்படும்போது இவற்றைக் கடைபிடித்தால் ஆரோக்கியம் நிலையானதாக மாறும். நோய் என்ற பயத்திற்கே இடமில்லை.
எல்லா வகை பீதிகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றும் எதிர்ப்பு சக்தியை சரியாக வைத்துக் கொள்வது எப்படி?
பசியை உணர்ந்து, பசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
தூக்கம் என்பது அவசியமானது. இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் தூங்க வேண்டிய அவசியமான நேரமாகும். இந்த நேரத்தில் தான் உடலில் எதிர்ப்பு சக்தி நோயெதிர்ப்பு வேலையை முழு வீச்சில் மேற்கொள்கிறது.

காய்ச்சல் வந்துவிட்டால் என்ன சாப்பிடலாம்?
எப்போதுமே பசி இல்லாமல் எதுவும் சாப்பிடக் கூடாது குறிப்பாக காய்ச்சல் வந்துவிட்டால். தாகம் இல்லாமல் எதையும் அருந்தக்கூடாது. பசிக்கும்போது பழங்கள் சாப்பிடலாம். தாகம் இருக்கும்போது பழச்சாறு அருந்தலாம். ஏனெனில் காய்ச்சல் இருக்கும் நிலையில் வெப்ப வெளியேற்றம் காரணமாக உடலின் உயிர்ச் சத்துகளில் ஒன்றான நீர்ச் சத்து அளவு குறையும். காய்ச்சல் இருக்கும் நிலையில் பழச்சாறு, இளநீர், மோர் குடிக்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. இவற்றைச் சாப்பிட்டால் காய்ச்சல் அதிகமாகும், ஜலதோஷம் வந்து சேரும் என்ற கவலையும் ஏற்படுகிறது. இது வீண் கவலை. காய்ச்சல் இருந்தாலும் இவற்றைச் சாப்பிடும் நிலையில் உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்து கிடைத்து, காய்ச்சல் குறையும்.
காய்ச்சல் என்பது ஓர் அறிகுறிதான். எனவே காய்ச்சல் குறைந்தவுடன், நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தவும் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் புரதச்சத்து அதிகம் தேவைப்படும். இந்நிலையில் தயிர், பருப்பு – கீரைகள் – காய்கறிகள் நிறைந்த உணவு ஆகியவற்றை காய்ச்சல் விட்ட பிறகு தொடர்ந்து சாப்பிட வேண்டும். பழங்கள் சாப்பிடுவதும் புரதச்சத்தை உடலுக்கு அளிக்கும். அசைவம் சாப்பிடுவோர் முட்டை சாப்பிடலாம். அசைவ உணவில் காரம்-மசாலா அதிகம் கூடாது.

-Regha Health Care

Leave a Reply