காண்டாக்ட் லென்ஸ் அணிவதால் ஏற்படக்கூடிய அபாயங்கள்

இன்றைய காலக்கட்டத்தில் கண்ணாடி அணியாமல் இருப்பவர்களை காணவே முடியாது. சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கண்ணாடியை அணிகிறார்கள். இப்படி பார்வையில் கோளாறு ஏற்படுவதற்கு கண்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் இருப்பது தான் காரணம். கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறப்பான உணவுகள்!!! அதிலும் தற்போது பலரும் கண்ணாடி அணிவதை அசிங்கமாக எண்ணி, காண்டாக்ட் லென்ஸ் அணிகிறார்கள். மேலும் இது சௌகரியமாக இருப்பதாலும், காண்டாக்ட் லென்ஸ் அணிகிறார்கள். ஆனால் காண்டாக்ட் லென்ஸ் அணிவதால் எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது என்பது தெரியுமா? கண்கள் எதுக்கு அடிக்கடி துடிக்குதுன்னு தெரியுமா? ஆம், காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் மிகவும் கவனமாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அதுவே பார்வைக்கு வேட்டு வைத்துவிடும். சரி, இப்போது காண்டாக்ட் லென்ஸ் அணிவதால் ஏற்படக்கூடிய அபாயங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

காண்டாக்ட் லென்ஸ் அணிவதால் ஏற்படக்கூடிய அபாயங்கள்!!!

நீண்ட நேரம் ஆபத்து,

காண்டாக்ட் லென்ஸை நீண்ட நேரம் அணிந்து வந்தால், கண்களின் விழிவெண்படலம் கடுமையாக பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நோய்த்தொற்றுகள்,

காண்டாக்ட் லென்ஸ் அணிய விரல்களைப் பயன்படுத்தும் போது, கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், கண்களில் அதிக அளவில் பாக்டீரியாக்கள் தொற்றி, கண்களுக்கு பிரச்சனையைத் தரக்கூடும்.

விழிவெண்படல புண் ,

ஆய்வுகளில், புகைப்பிடிப்பவர்கள் காண்டாக்ட் லென்ஸ் அணிந்தால், விழிவெண்படல புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளதாக தெரிய வந்துள்ளது

தூசிகள்,

காற்றின் மூலம் தூசிகளானது காண்டாக்ட் லென்ஸ்களில் படிந்து, அதனை சரியாக கவனிக்காமல், கண்களில் பொருத்தினால் அரிப்புக்கள் மற்றும் உறுத்தல்கள் எந்நேரமும் இருந்து, அதனால் கண்களில் இருந்து கண்ணீர் அதிகம் வெளிவரும்.

உலர்ந்த கண்கள்

சிலருக்கு, காண்டாக்ட் லென்ஸ் கண்களில் வறட்சியை ஏற்படுத்தும். ஏனெனில் லென்ஸானது கண்களை மூடி, ஆக்ஸிஜனை அடைத்துவிடும். இதனால் கண்களில் வறட்சி ஏற்படும்.

குறிப்பு ,

நீச்சலில் ஈடுபடும் போது, காண்டாக்ட் லென்ஸை எடுத்துவிட்டு பின் இறங்க வேண்டும். இதனால் கண்ளில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

Leave a Reply