எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைந்ததாக புகார்

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணியை இந்திய அரசும், நேபாள அரசும் இணைந்து மேற்கொள்ள உள்ளன

.இந்திய – நேபாள எல்லையில் இமயமலை தொடரில் உள்ள எவரெஸ்ட் சிகரம், கடல் மட்டத்தில் இருந்து 8,848 மீட்டர் அதாவது, 29,029 அடி உயரம் கொண்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நேபாள தலைநகர் காத்மாண்டுவின் வடமேற்கு பகுதியில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டு, ரிட்சர் அளவுகோலில் 7.8 என பதிவானது. இதில் ஏரளமான கட்டடங்கள் நொறுங்கின. 9,000 பேர் உயிர் இழந்தனர்.

இந்த பூகம்பத்தால், எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் சற்று குறைந்துள்ளது என்ற புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய சர்வே துறை மற்றும் நேபாள அரசு ஆகியவை, எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளக்க முடிவு செய்துள்ளன.

புதிய நடைமுறை

இந்திய சர்வே துறையின் சர்வேயர் ஜெனரல் டாக்டர் ஸ்வர்ணா சுப்பாராவ் கூறியதாவது:

இந்திய சர்வே துறையால், இன்ஜியாய்டு வெர்சன் 1.0 என்ற புதிய கணித அளவிடும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜி.பி.எஸ்., கருவிகளை பயன்படுத்தி, கடல் மட்டத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரம் எவ்வளவு உயரத்துடன் உள்ளது என்பதை துல்லியமாக கணக்கிட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply