உலகின் மிக உயரமான கடிகார கோபுரம்

உலகிலேயே மிக உயரமான கடிகார கோபுரத்தை இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூருவில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

22 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட அடித்தளத்தில் 135 மீட்டர் உயரத்தைக் கொண்டதாக இந்தக் கடிகாரக் கோபுரம் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மைசூருவில் 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பன்னாட்டு கல்வி மைய வளாகத்தில் இந்தக் கோபுரம் அமைக்கப்படும் என இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பெரும்பாலான மணிக் கூண்டுகளில் இயந்திரக் கடிகாரங்கள் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்தக் கோபுரத்தில் டிஜிட்டல் கடிகாரம் பொறுத்தப்படவுள்ளது எனவும் அந்த நிறுவனம் கூறுகிறது.

சுமார் 60 கோடி ரூபாய் செலவில் 20 மாத காலத்தில் இந்தக் கோபுரம், கட்டி முடிக்கப்படும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply