உங்கள் தகவல் உங்கள் உரிமை!

பொருளின் பெயரையும் விலையையும் மட்டுமே உற்றுப்பார்த்த நாம், இப்போது அதன் எக்ஸ்பயரி தேதியையும் கவனிக்கஆரம்பித்திருக்கிறோம். இதுவே நம்மிடம் ஏற்பட்டிருக்கும் நல்ல மாற்றம்தான். இந்த விழிப்புணர்வு மட்டுமே போதுமா?
நிச்சயம் போதாது. ‘அதுக்கும் மேல நாம் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு ரகசியம் இருக்கிறது. அதுதான் உணவுப் பொருளின் பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் Nutrition facts… அதாவது,சத்துணவுத் தகவல்கள்.

நாம் வாங்குகிற உணவில் என்னென்ன அடங்கியிருக்கிறது என்பதைப் பற்றிய குறிப்புதான் இந்த Nutrition facts. உணவுப் பொருளில் அடங்கியிருக்கும் புரதம்,கார்போஹைட்ரேட், கொழுப்பு, உப்பு,உணவின் சக்தி போன்றவற்றைச் சொல்லும் பயோடேட்டாவான இந்த நியூட்ரிஷன் ஃபேக்ட்ஸில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய சில முக்கிய விஷயங்களை கொஞ்சம் பார்ப்போம்…

*Serving size

நாம் சாப்பிட வேண்டிய உணவின் அளவு/ எண்ணிக்கையை குறிப்பிட்டிருக்கும் பகுதி இது. ஒரு பிஸ்கெட் பாக்கெட் வாங்குகிறோம் என்றால், ஒருவேளைக்கு எத்தனை பிஸ்கெட் வரை சாப்பிடலாம் என்பதை இந்த அளவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

*Calories

உணவில் அடங்கியிருக்கும் உடலுக்குத் தேவையான சக்தியின் அளவைத்தான் கலோரி (Calorie) என்று குறிப்பிடுகிறோம். இந்த கலோரி அளவைத் தெரிந்துகொள்வதும் கிட்டத்தட்ட Serving size போன்றதுதான். எந்த உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டால் அதற்கேற்றாற்போல் நாம் சாப்பிடுவதைத் தீர்மானிக்கலாம்.

உதாரணத்துக்கு, 170 கலோரி உள்ள ஓர் உணவில் அடங்கியிருக்கும் கொழுப்பின் அளவு 60 என்று வைத்துக் கொள்ளுங்கள். அதுவே இரண்டு மடங்காக 340 கலோரி உணவு எடுத்துக் கொள்ளும்போது உங்கள் உடலில் சென்று சேரும் கொழுப்பின் அளவும் 120 என்று இரண்டு மடங்காகஉயரும்.

*Total fat

நம் உடலுக்குத் தேவையான கொழுப்பின் அளவுக்குத் தகுந்தாற்போல் உணவைத் தேர்ந்தெடுக்க நமக்கு வழிகாட்டும் பகுதி இது. உணவுப் பொருளை சுவையாகவும் நல்ல நிறமாகவும் தயாரிப்பதற்காக பல வேதிமாற்றத்துக்கு உட்படுத்தும்போது அதில் டிரான்ஸ்ஃபேட் என்ற கெட்ட கொழுப்பு உருவாகிறது. இது ரத்தத்தில் இருக்கிற நல்ல கொழுப்பின் அளவைக் குறைத்துக் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்துவிடுகிறது. அதனால், Total fat என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அளவு அதிகமாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

*0 % Transfat

‘டிரான்ஸ்ஃபேட் என்ற கொழுப்பே இந்த உணவில் இல்லை’ என்று சில உணவு பாக்கெட்டுகளில் அச்சிட்டிருப்பார்கள். இதில் உண்மையும் ஜீரோ சதவிகிதம்தான். காரணம், டிரான்ஸ்ஃபேட் இல்லாமல் ஓர் உணவை சுவையாகத் தயாரிக்க முடியாது.அதனால்தான், 0.5 கிராம் டிரான்ஸ்ஃபேட் இருக்கலாம் என்று நம் சட்டமே அங்கீகரித்திருக்கிறது. அதனால், ஜீரோ சதவிகிதம்என்பதை நம்பாதீர்கள்.

*Wise decision

நம் உடலுக்குத் தேவையான முக்கிய சத்துகளான புரதம், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்துகள் அடங்கியிருக்கும் பட்டியலைப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது நீங்கள் நல்ல நுகர்வோராக வளர்ந்திருக்கிறீர்கள் என்பதன் முக்கிய அடையாளம்.

*Daily value

நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் உணவை நாள் ஒன்றுக்கு எந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும் பகுதி. குறிப்பாக, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியப் பகுதி இது. ஒருவர் உணவில் உப்பின் அளவைக் குறைக்க வேண்டியிருக்கிறது என்றால் அதற்கேற்றாற்போல் ஞிணீவீறீஹ் ஸ்ணீறீuமீ என்பதில் உப்பின் சதவிகிதம் 5 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் உணவையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

*Fatty acids

மூன்று வகை கொழுப்பு அமிலங்களை பாக்கெட்டில் குறிப்பிட்டிருப்பார்கள். அதில் Saturated fatty acids என்ற கொழுப்பு அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கும் உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இந்த சாச்சுரேட்டட் வகை அமிலத்தை ஏற்கெனவே நம் உடல் உற்பத்தி செய்துகொள்வதால் உணவின் மூலம் நமக்குக் கிடைப்பது தேவைக்கும் அதிகமான கொழுப்பாகவே இருக்கும்.

அதனால், Mono unsaturated fatty acids, Poly unsaturated fatty acids போன்ற கொழுப்பு அமிலங்களேஉடலுக்கு நன்மை தருபவை. இதயத்துக்கு நல்லது

டிரான்ஸ்ஃபேட் இல்லாமல் ஓர் உணவை சுவையாக தயாரிக்க முடியாது. அதனால்தான், 0.5 கிராம் டிரான்ஸ்ஃபேட் இருக்கலாம் என்று சட்டமே அங்கீகரித்திருக்கிறது. அதனால், ஜீரோ சதவிகிதம் என்பதை நம்பாதீர்கள்

Leave a Reply