இவ்வளவுக்கும் காரணம் இவர்தான்யா….

ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவிக்க மோடிக்கு ஐடியா கொடுத்த அந்த நபர் யார் தெரியுமா?

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்ததன் பின்னணியில் ஒரு நபர் உள்ளார். சில மாதங்கள் முன்பு, டெல்லியில் பிரதமரை சந்தித்து கருப்பு பணத்தை ஒழிக்க ஆலோசனை கூறிய அவருக்கு முதலில் கொடுக்கப்பட்டது 9 நிமிட அப்பாயின்மென்ட். ஆனால், அவரது விளக்கத்தால் கவரப்பட்ட மோடி, தொடர்ந்து ஆலோசனை நடத்த ஆரம்பித்ததன் விளைவு, இந்த சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது.

பிரதமரையே வியப்பில் ஆழ்த்தி ஐடியா கொடுத்த அந்த நபர் பெயர் அனில் போகில். புனே நகரை சேர்ந்த நிதி ஆலோசகர். அனில் போகில் பிரசன்டேசன் மூலம் பிரதமருக்கு சில ஆலோசனைகளை வழங்கியிருந்தார். அந்த ஆலோசனைகளில் முக்கியமானவை இவைதான்

1. ஏற்றுமதி – இறக்குமதி வரிகளை தவிர்த்து, தற்போதுள்ள 56 வகையான வரிகளை திரும்பப்
பெற வேண்டும்.

2. இந்தியாவில் பெரு மதிப்பு கொண்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுதல்.

3.அனைத்து பண பரிவர்த்தனைகளும் வங்கி மூலமாக காசோலை, வரைவோலை மற்றும்
ஆன்லைன் மூலமே நடைபெறவேண்டும்.

4. வருவாய் வசூலுக்கு ஒற்றை வங்கி முறை.

இந்த பரிந்துரைகளை அனில், முன்மொழிந்ததற்கு பின்னால் இருந்த முக்கிய காரணங்கள்:

1. இந்தியாவின் ஒருநாள் பண பரிவர்த்தனை 2.7 லட்சம் கோடி ரூபாய், ஓர் ஆண்டுக்கு என
கணக்கிட்டால் இதுவே 800 லட்சம் கோடி ரூபாய் ஆகிறது. இதில் வெறும், 20% அளவிலான
பரிவர்த்தனைகள் மட்டுமே வங்கிகள் மூலம் நடைபெறுகின்றன, மீதி அனைத்தும் ரொக்கமாக
வேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் ஆகும். ( இப்படி ரொக்கமாக பரிவர்த்தனை நடைபெறுவதால் அவை கருப்புப் பணமாக மாறுவது குறிப்பிடத்தக்கது.)

2. நாட்டின் 79 சதவீத மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய் அளவிற்கே செலவு செய்கின்றனர்,
இதனாலேயே பெரிய மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் தேவையில்லாததாக கருதப்படுகிறது.

இன்று முதல் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் நம் கரங்களில் தவழப்போகும் வேலையில்,
கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளுக்கு எதிரான மத்திய அரசின் இந்த நடவடிக்கை
சாதகமா அல்லது பாதகமா என்பதனை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Leave a Reply