இந்த ஆண்டு மழை எப்படி இருக்கும்?

 Mr. பிரதீப் ஜான் – கால நிலை குறித்து மிகவும் சரியாக கூறுபவர். 

பிரதீப் ஜானின்  ‘தமிழ்நாடு வெதர்மேன்’ (fb.com/Tamilnaduweatherman) என்ற இவருடைய முகநூல் பக்கம் மிகவும் பிரபலம்.

அவர் கூறியதாவது…

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணித்துக் கூறிவிட முடியாது.

அக்டோபர் முதல் டிசம்பவர் இறுதிவரை வடகிழக்குப் பருவமழை நீடிக்கும்.

இந்த காலகட்டத்தில் ஏற்படும் அடுத்தடுத்த

1 காற்றழுத்த தாழ்வு நிலை, உருவாகும் புயல் அடிப்படையிலேயே மழையளவை கணிக்க முடியும்.

இப்போதைக்கு

2. நவம்பர் முதல் வாரத்தில் ஒரு புயல் சின்னம் உருவாக வாய்ப்பு இருக்கிறது.

அது எப்படி வலுப்பெறுகிறது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்..

3.தெற்கு சீனக் கடலில் உருவாகும் புயல் சின்னங்கள் வங்கக் கடலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒருவேளை அந்த புயல் வலுப்பெற்று அதன் தாக்கம் வங்கக் கடலில் தீவிரமாக இருந்தால் கடலோர மாவட்டங்களில் ஓரிரு தினங்களுக்கு கனமழை எதிர்பார்க்கலாம். இருப்பினும், அது கடந்த டிசம்பர் மழையைப் போல் தீவிர கனமழையாக இருக்குமா என்பதை இப்போதே கூற முடியாது.

4.பசிபிக் பெருங்கடலின் வெப்ப அளவு வழக்கமான வெப்ப அளவைக் காட்டிலும் 2 செ.மீ. அதிகரித்தால் அதை எல் நினோ தாக்கம் என்றும் அதே வெப்பளவு 2 செ.மீ. குறைவாக இருந்தால் அது லா நினோ தாக்கம் என்றும் கூறப்படுகிறது. அதுவே, வெப்ப அளவு மையமாக இருந்தால் அது என்சோ (ENSO) என்று அறியப்படுகிறது. இந்த ஆண்டு பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை நியூட்ரல் நிலையில் இருக்கிறது. இருப்பினும், இந்த வெப்ப நிலை அதிகரிக்கவும், குறையவும் வாய்ப்பிருக்கிறது.

இப்போதைக்கு நியூட்ரல் நிலையில் இருப்பதால் வடகிழக்கு பருவமழை இயல்பாக 44 செ.மீ. அளவு பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், இது இப்போதைக்கான கணிப்பு மட்டுமே. டிசம்பர் இறுதிக்குள் தெற்கு சீனக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை, புயல் சின்னங்களின் தாக்கத்தைப் பொறுத்து நிலவரங்கள் மாறும். இருப்பினும், மக்கள் தேவையற்ற அச்சங்களை தவிர்க்கவும்.

Leave a Reply