ஆண்கள் ஸ்மார்ட் ஆக இரண்டு வழிகள்

உடல் பருமன் என்பது உலகப் பிரச்னையாகிவிட்ட நிலையில், நம் உடல் மீதான அக்கறை மட்டுமே இதிலிருந்து காக்க முடியும். தினமும் அரை மணி அல்லது ஒரு மணி நேரம் செலவழித்து நம் உடம்பை சீர் செய்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அழகாக இருந்து என்ன பயன், தொப்பை ஒரு பெரிய குறை. அதைக் கரைக்க சாப்பாட்டில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது, பயிற்சியும் செய்ய வேண்டும். அனைவராலும் செய்யக் கூடிய மிக எளிமையான யோகப் பயிற்சிகள் இரண்டு தொப்பையைக் குறைக்க உதவும். செய்து பாருங்கள், அதன் பின் கண்ணாடியில் தெரிவது நாம் தானா என்ற சந்தேகம் ஏற்படுவது உண்மை.
பச்சிமோத்தாசனம்

paschimottasana

 

கால்களை நீட்டி நேராக உட்காரவும். இரு கைகளும் மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே கைவிரல்களால் கால் பாதத்தையோ அல்லது கட்ட விரலையோ பிடித்து கொள்ளவேண்டும். கால்களை மடக்க கூடாது. இந்த நிலையில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை இருங்கள்.
பலன்கள்: தொப்பை குறைய நல்ல வழி இது, இடுப்பு பகுதியில் இருக்கும் தசைகள் குறையும்.
புஜங்காசனம்

pujankaasanam

தரையில் குப்புற படுக்கவும். கைகளைதரையில் ஊன்றி தலையை மட்டும் உயர்த்தவும். வயிற்று பகுதியை தூக்க கூடாது.
பலன்கள்: தினமும் இந்த ஆசனம் செய்து வந்தால் வயிற்று பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு நீங்கும், சதை குறைந்து ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

Leave a Reply