அமைதியை நம்மிடமிருந்து தொடங்குவோம்

அமைதியை நம்மிடமிருந்து தொடங்குவோம்

அமைதி….. தினமும் காலையில் எழுவதில் இருந்து எவ்வளவு இரைச்சல்கள் நம்மை சுற்றி?! எங்கே நிம்மதி என்பது போல இன்று நம்மில் பலர் எங்கே அமைதி என தேடுகிறோம். மெடிடேஷன் சென்டர்கள் சென்று தியானம் பெறும் போது மனம் கொஞ்சம் அமைதி காக்கிறது. திடீர்னு ஏன் அமைதி பத்தி பேசுறோம்னு யோசிக்கிறீங்களா? நேற்று முழுவதும் அமைதி தினத்தை பல்வேறு விதங்களில் கொண்டாடினார்கள். சரி அமைதி தினம் எதற்கு தெரியுமா?
‘உலகில் அமைதி நிலைக்க வேண்டும், போர்கள் இல்லா அமைதியான உலகத்தை உருவாக்க வேண்டும்’ என்பது தான் அமைதி தினத்திற்கான தார்மீக கருத்து……. முதன்முதலில் 1982ல் அமைதிக்கான தினம் அறிவுறுத்தப் பட்டது. செப். மாதம் வரும் மூன்றாவது செவ்வாய் கிழமையைத் தான் அமைதி தினமாக அறிவித்திருந்தனர். 2001ம் ஆண்டில் தான் செப்.21 தேதி அமைதிக்கான தினமாக யுனைடட் கிங்கடமால் ஸ்பெசிஃபிக்காக செலக்ட் செய்யப்பட்டது. 2002ல் அது அமலுக்கு வந்தது. 2013ல் யுனைடட் நேஷன்ஸ் இந்த தினத்தை  ‘போரை தடுத்து உலக அமைதியை நிலைநிறுத்த’ என்று கூறி அறிவித்தது. 
போர் வெற்றியா?
உள்ள அமைதியையும் அல்லவா தொலைத்து விட்டோம் நாம் இன்று? நவீன டெக்னாலஜிஸ் நம்மை தொழில்நுட்ப ரீதியாக வளர்த்தது எவ்வளவு உண்மையோ அதே அளவு உளவியல் ரீதியாக பாதித்தல்லவா விட்டது!!! உள்ள அமைதியைக் காட்டிலும் தற்போது உள்ள சூழலில் உலக அமைதிதான் ரொம்ப முக்கியம். அணு ஆயுதங்களைக் கையில் கொண்டு இருநாடுகள் முழுப்போரில் ஈடுபட்டு அவற்றை பயன்படுத்தும் போது எந்தவொரு நாடுமே வெற்றிபெற்றதாக கூற முடியாது. ஏனெனில், ஒரு நாடு மற்றொரு நாட்டை அழிக்கும்போது தானும் தான் அழிந்து போகும். ஆகவே, இந்த பிரச்சனைக்கெல்லாம் போர் நிச்சயம் ஒரு தீர்வாகாது.
உலக அமைதிக்கு என்னதான் வழி?
போரில்லாத நிலையை மட்டும் உலக அமைதி என கூறிவிட முடியாது. ரிச்சர்டு கோப்டன் என்ற பிரித்தானிய அறிஞர், “நாடுகளுக்கிடையே கட்டுபாடற்ற வாணிகம் நடைபெறுவது அமைதிக்கு வழிவகுக்கும்” என்ற கோட்பாட்டை முன்வைக்கிறார். சுதந்திர வணிகம் நடக்கும்போது எந்த நாடும் முற்றிலும் தன்னுரிமை கொண்டதாக மாறாது என்பது தான் அவரது கோட்பாட்டின் மூலக்கூறு. அதாவது, ஒரு நாடு துப்பாக்கி உற்பத்தி செய்கிறது மற்றொரு நாடு குண்டு தயாரிக்கிறது என்றால் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யாமல் இரண்டு நாடுகளும் போரிட்டுக் கொள்ள முடியாது. இது நடைமுறையில் முழுவதுமாக சாத்தியமில்லை என்றாலும், பன்னாட்டு நிறுவனங்கள் போரினால் மிகவும் பாதிக்கப்படும். ஆகையால் அவை போர்களை எதிர்த்து குரல் கொடுக்கும்……..இது உலக அமைதிக்கு வழிவகுக்கும். அடிமட்டத்தில் மக்களிடையே அமைதி வளர்தல், ஒரு நாடு மற்றொரு நாட்டின் உள் முடிவுகளில் தலையிடாமல் இருப்பது முதலிய கோட்பாடுகள் உலக அமைதியை நிலைநாட்ட கூறப்பட்டன. 
உலக அமைதியை நடைமுறைக்கு கொணர்வதற்கு உலகில் உள்ள வளங்களைப் பகிர்ந்துக்கொள்ள் வேண்டும் என்கிறார்கள் எக்ஸ்ப்ர்ட்ஸ். 
அமைதியை நம்மிடமிருந்து தொடங்குவோம்…….:
இன்றைய நவீன உலகத்தில் ரொம்பவே அவசியமான ஒன்று இந்த அமைதி. நாடுகளெல்லாம் ஒன்றோடு ஒன்று போர் புரிந்து சண்டை போடும் போதும், நாட்டுக்குள்ளேயே சண்டை போட்டு பல உயிர்களை இழக்கும் தருணத்திலும் தான் உலகில் அமைதிக்கான தேவை புரிகிறது நமக்கு. கிரோதமற்ற, விரோதமற்ற, பழிவாங்க தெரியாத அந்த அமைதிக்கு தான் எவ்ளோ பெரிய சக்தி இருக்கிறது!!!! 1982ம் ஆண்டு முதல் அமைதிக்கான தனி தினம் கொண்டாடப்படுகிறது. கொண்டாடுவதோடு நிறுத்திவிடாமல், உலகம் முழுவதும் இருக்கும் நம்மை போன்ற தோழமைகளிடம் அமைதியை பரப்புவோம். மனித இனம் ஒரே குடும்பம் அல்லவா? நாமே நம்மிடம் அமைதியை நிலை நாட்டாவிட்டால் எப்படி!!!!!!!
-ஜெ. நிவேதா

மாணவப் பத்திரிகையாளர்.

விகடன்

Leave a Reply