வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்

​கடுங் குளிர் நிறைந்த ஒரு இரவில் ஒரு மன்னன் தன் அரண்மனைக்கு வந்தான். அரண்மனைவாசலில் மெல்லிய ஆடையுடன்   வயது முதிர்ந்த காவலாளியைப் பார்த்தான்.
“குளிர் கடுமையாக இருக்கிறதே. அதை நீ உணரவில்லையா?” என்று கேட்டான்.
“ஆம். உணர்கிறேன் மன்னா. ஆனால், குளிரை தடுக்கும் ஆடை என்னிடம் இல்லையே!” என்றான் காவலாளி.
அதற்கு மன்னன், “கவலைப்படாதே, நான் அரண்மனை சென்று குளிரை தாங்கும் கம்பளி ஆடையை உனக்கு அனுப்புகிறேன்” என்று கூறி அரண்மனைக்குள் சென்றான்.
மன்னரின் வார்த்தையை கேட்டு அந்த காவலாளி அகமகிழ்ந்தான்.
அரண்மனைக்கு சென்ற மன்னன் தான் வாக்களித்தை மறந்து விட்டான்.
காலையில் அந்த காவலாளி இறந்து கிடந்தான். அவனருகே ஒரு கடிதம் இருந்தது.
அந்த கடிதத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது.
“மன்னா!! இவ்வளவு நாட்களாக கடும் குளிரை மவுனமாக தாங்கி கொண்டிருந்தேன். ஆனால், குளிரை தாங்கும் ஆடை கிடைக்கும் என்ற என் எதிர்பார்ப்பு இதுவரை இருந்த என்னுடைய மன உறுதியை குலைத்து என்னை கொன்று விட்டது”.
ஆம்! சகோதரர்களே!

மற்றவர்களிடம்  நீங்கள் கொடுக்கும் வாக்குறுதி மற்றவரிடம் நீங்கள் எண்ணி பார்க்காத அளவு நம்பிக்கையை ஏற்படுத்தலாம். எனவே, அந்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.
நீங்கள் அறியமாட்டீர்கள்! உங்களின் நிறைவேற்றாத  வாக்குறுதி நீங்கள் வாக்களித்தவருக்கு எவ்வளவு  பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று. பபி

 மாலை வணக்கம்!

Leave a Reply