யதார்த்தம்

​சைக்கிள் மூலம் கடைகளுக்கு கடுகு,பெருங்காயம் விற்கும்

தொழில் செய்யும் அந்த நண்பருடைய 

மூத்த மகனுக்கு கடந்த மாதம் மின்சார வாரியத்தில் பொறியாளர் பணி கிடைத்துள்ளது.இளைய மகன் பொறியியலில் மேற்படிப்பு படிக்கிறார்.
அப்பா பஸ் பாடிகம்பெனி ஊழியர்

அம்மா டெக்ஸ்டைல்ஸ் நிறுவண டெய்லர்

கடன் உடன் வாங்கி குடித்தனம்

மகள் தற்போது பிரபல மென்பொருள் நிறுவன பணியாளர்.

மகன் மருத்துவக்கல்லூரி மாணவன்

அப்பா சொல்லிக்கொடுக்கவில்லை

அம்மா படி படி என்று காவலிலுருக்கவில்லை

எப்படி படித்தார்கள்

அவர்களது குடும்ப சூழ்நிலை

படித்தால் தான் வாழ்வு

படிக்காவிட்டால் அனைவருக்கும் தாழ்வு

எனவே படித்தார்கள்!
தனியார் பள்ளியில் குறைந்த சம்பளம் பெறும் ஆசிரியை,கணவருக்கு சரியான தொழில் அமையவில்லை.மூன்று பிள்ளைகளின் படிப்பு செலவு,குடும்பச் செலவு,வாடகை வீடு என வாழ்க்கைப் போராட்டம்.

மகன் +2 வில் 1160 மதிப்பெண்,அண்ணா பல்கலையில் சீட் கிடைக்கும் என்று நம்பிக்கை,மகள் 10 ஆம் வகுப்பில் 493 மதிப்பெண்.இரண்டு வருட(+2) படிப்பு இலவசம் பேருந்து கட்டணம் உள்பட.
சாதனைகள் எப்படி சாத்தியமாகிறது.
அய்யா தென்கச்சியார் சொன்ன கதைதான் ஞாபகம் வருகிறது
அந்த அரண்மனையில் எலித்தொல்லை
மன்னர் உத்தரவின் பேரில் அரண்மனை பூனையை வரவழைத்து எலியைப் பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த அரண்மனைப் பூனை கம்பீரமாக நடந்து வந்து எலியைப் பிடிக்க முயற்சி செய்தது.

எலி ஒரே தாவாக தாவி ஓடி விட்டது.
அரண்மனை பூனை தோல்வியைத் தழுவியதால் மாற்று ஏற்பாடு செய்யப்ட்டது.
அந்த ஊரின் ஏழைக் கூழித்தொழிலாளியின் வீட்டுப் பூனை வரவழைக்கப்ட்டது.

அந்த நோஞ்சான் பூனை ஒரே பாய்ச்சலில் எலியைப் பாய்ந்து பிடித்துவிட்டது.
அனைவரும் ஆச்சர்யத்துடன் கேட்டார்கள்

எப்படி உன்னால் மட்டும் எலியைப் பிடிக்க முடிந்தது!
பூனை சொல்லியது 

நான் பூனை அவ்வளவுதான்

நான் எலியைப் பிடிப்பேன் அவ்வளவு தான்

இதுக்கு மேல சொல்ல ஒன்னும் இல்ல என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டது.
அரண்மனைப் பூனை விளக்கம் சொல்லியது
நான் அரண்மனையில் சொகுசாக,பாலை மட்டுமே குடித்து வளர்ந்த பூனை.

அந்த நோஞ்சான் பூனைக்கோ எலி தான் உணவு,ஆகையால் அந்தப் பூனையால் எலியைப் எளிதில் பிடிக்க முடிந்தது, சொல்லிவிட்டு நடந்தது.
இந்தக் கதை மாதிரிதான் 

வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிந்து கொள்ளும் ஏழைகள் வீட்டுப் பிள்ளைகள் முழு மூச்சாகப் படித்து நல்ல நிலைக்கு செல்கிறார்கள்.

வசதி வாய்ப்புடன் செல்லம் கொடுத்து வளரும் பிள்ளைகள் பின் தங்குகிறார்கள்.
வாழ்க்கையின் இயல்பு நிலையைப் புரிந்துகொண்டு முயன்றால் முடியாதது இல்லை.
          நன்றி

              வணக்கம்

   

ஆசிரியர் ஜெயன்செந்தில்குமார்.ஆதித்யா IAS அகடமி.கரூர்

Leave a Reply