​கும்பகோண குசும்பு

 OXFORD  DICTIONARY ல  வெள்ளைக்காரன்  காலத்திலேயே நம்ப ஊரு  KUMBAKONAM இடம் பெற்றிருந்தது . 
என்ன அர்த்தம் போட்டிருந்தான் தெரியுமா ?  PLACE OF EDUCATED ROGUES  என்று தான் ! 
ராஜாஜி  இந்தியாவின் முதல்   கவர்னர்  ஜெனரல் ஆனவுடன் போராடித்தான்  அந்த  வரியை  நீக்க வைத்தார் . அந்த  பின்னணி  இது தான் . 
மைலாப்பூரைச் சேர்ந்த ஒரு வக்கீலும் அவரது  பார்யாவும்  ( அதாங்க மனைவி ) அந்த காலத்தில்  கும்பகோணம் செல்லும்  ரயிலில் ஏறினர் . அவர் கட்டுக்குடுமியுடன்  பஞ்சகச்சம் கட்டியும்  மாமி மடிசார் புடவையிலும்  ஒரு துணிப்பையில்  காய்கறி மற்றும் கூஜாவில் தண்ணீர் மற்றோரு சின்ன மஞ்சப்பையில் கோகுலாஷ்டமி பக்ஷணம் (இனிப்பு மற்றும் காரம்)  சகிதமாக அமர்ந்து இருந்தனர் . பெட்டியில்  கூட்டம் இல்லை . 
ரயில் கிளம்புவதற்கு விசீல் ஊதியதும்  இரண்டு வெள்ளைக்காரங்க  ஒடி வந்து பெட்டியில் ஏறி வக்கீலுக்கு எதிரே  காலியாக இருந்த பெஞ்சில் அமர்ந்தனர் . வண்டி கிளம்பியதும் வெள்ளைக்காரங்களுக்கு  எதிரே இருந்த  வக்கீல் தம்பதிகளின் நடை உடை பாவனைகளை  தங்களுக்குள் கிண்டலடித்து பேசிக்கொண்டிருந்தனர் . 
எதிரில் உள்ள ஆள்  ஆங்கிலம் தெரிந்த ஒரு வக்கீல்  என்பது அவர்களுக்கு தெரியாது . வக்கீலுக்கு ரத்தம் கொதித்தது . ஆனால் என்ன செய்ய முடியும் ?  நடப்பது வெள்ளையர் ஆட்சி. 
சிறிது நேரம் கழித்து  வெள்ளைக்காரங்க  தாங்கள்  கொண்டு வந்த  ஆப்பிள்களை  பேனாக்கத்தி முலம் வெட்டி  WINE ல  முக்கி சாப்பிட்டு விட்டு தூங்க ஆரம்பித்தார்கள் . 
வக்கீல் மட்டும் தூங்கவில்லை . அப்போது தான் அந்த யோசனை அவருக்கு  உதித்தது . துணிப்பையில் மார்க்கெட்டில் வாங்கிய கருணைக்கிழங்கை பெரிய அளவில் ஒன்று எடுத்து தன் பேனாக்கத்தியின் மூலம்  தோலை  உரித்தார். சிவப்பு நிறத்தில் இருந்த கிழங்கை அழகான சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொண்டார் . 
பொழுது விடிந்து வண்டி  கும்பகோணத்தை நெருங்கும் வேளையில் தன் பையிலிருந்த ஒரு தொன்னையை எடுத்து அதில் இரண்டு முறுக்கு சீடை  மற்றும் வெட்டிய சிவப்பு கருணைக்கிழங்கு துண்டுகளை வைத்து   PLEASE HAVE THIS INDIAN  APPLE  &  OUR SOUTH INDIAN TREAT  என்று மட்டும் சொல்லிவிட்டு வக்கீல் தம்பதிகள் கும்பகோணத்தில் இறங்கி விட்டனர் . 
வெள்ளைக்காரங்க கும்பகோணம் தாண்டி  எந்த இடம் போனார்களோ தெரியவில்லை .  முறுக்கு சீடையை ருசித்து சாப்பிட்டு விட்டு  கருணைக்கிழங்கு துண்டுகளை WINE ல முக்கி  நான்கு துண்டுகளை வாயில் கடித்து முழுங்கினர் . அவ்வளவு தான் !  தொண்டையில்  தாங்க மூடியாத அரிப்பு ஆரம்பித்தது . 
துடிக்க ஆரம்பித்து எவ்வளவு தண்ணீர் குடித்தும் அடங்கவேயில்லை .அதற்கு ஒரே மருந்து புளியை உள் நாக்கில் தேய்க்க வேண்டும் என்பது  வெள்ளைக்காரனுக்கு எப்படி  தெரியும் ? 
அவர்கள் கருணைக் கிழங்கை பார்த்தது கூட கிடையாது . அதன்பிறகே OXFORD DICTIONARY ல் அவ்வாறு  எழுதினர் . நாடு சுதந்திரமடைந்து ராஜாஜி கவர்னர் ஜெனரலாகி  அந்த  வரி  நீக்கப்பட்ட பிறகு தான் நடந்த  நிகழ்ச்சியை விலா வாரியாக அந்த வக்கீல்  வெளி உலகத்துக்கு தெரியபz்படுத்தினார் !
From Kumbakonam natives .. Nice msg

Leave a Reply