பயம்

​ஒருவன் கடலுக்கு மீன் பிடிக்க

கிளம்பும் தன்

நண்பனிடம் கேட்கிறான் , “உனது

தாத்தா எப்படி இறந்தார்?” .

அவன் கூறினான் “படகு கவிழ்ந்து

கடலில் மூழ்கி இறந்தார்”.

“சரி , உனது அப்பா எப்படி இறந்தார்?” ,

“அவரும் அப்படித்தான் மூன்று

நாட்கள் கழித்துதான் அவரது

சடலம் கிடைத்தது” என்றான்.

இவனுக்கு ஒரே ஆச்சரியம், “உனது

குடும்பம் முழுவதும்

கடலில் மூழ்கி இறந்தும் உனக்கு

கடலைப் பார்த்து பயமில்லையா?”

என்றான் .

அவன் திருப்பி கேட்டான் , “உனது

தாத்தாவும் , அப்பாவும்

எப்படி இறந்தார்கள் ?” .

“அவர்கள் மூப்பெய்தி,

நோய்வாய்பட்டு படுக்கையில்

கிடந்து

இறந்தார்கள் ” என்றான் .

அப்போ படுக்கையை பார்த்தால்

உனக்கு பயமாக இல்லையா.

Leave a Reply