​Bigg Boss நிகழ்ச்சி பற்றிய பதிவு இது

 (படிப்பதற்கு கொஞ்சம் அசௌகரியமாக இருந்தால் பெண்கள் இப்பதிவை படிப்பதைத் தவிர்க்கவும்) நான் சினிமா, சுற்றுலா என்று பதிவு போட்டால் மட்டுமே நிறைய லைக்&கமெண்ட் கிடைக்கிறது அதே வேளையில் சமூகம் சார்ந்த பதிவு போட்டால் லைக் செய்பவர்கள் எண்ணிக்கை 30 பேரை கூடத் தாண்டுவதில்லை.. அதனாலேயே இந்தப் பதிவு 3 நாட்களாய் தயார் நிலையில் இருந்தும் பதிவிட மனமின்றி தற்போது பிறர் கண்டுகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணம் வந்தவுடன் பதிவிடுகிறேன்.. Bigg Boss என்பது ஒரு தரம் தாழ்ந்த உள்ளடக்கத்தை கொண்ட நிகழ்ச்சியாகும்.. சல்மான் கானை வைத்து வெளிநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியை இந்திக்குக் கொண்டு வந்தனர்.. வெளிநாட்டு கலாச்சாரம் போலவே இந்தியிலும் அதே பாணியில் அந்நிகழ்ச்சியை நடத்தினர்.. இப்பொழுது நம் தமிழ்நாட்டிலும் அப்படியொரு அபத்தத்தை செய்வார்களோ என மனம் பதறுகிறது.. இந்தியில் இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி சினிமாவில் ஒரு நல்ல வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக சில மாடலிங் பெண்கள் அருவருப்பான விஷயங்கள் பல செய்தனர்.. (Kashmera Shah என்று Googleலும் Youtubeலும் தேடிப் பார்த்தால் அந்த அபத்தங்கள் புரியும்) தேவையில்லாத சர்ச்சையான விஷயங்களைப் பேசுவது, வேண்டுமென்றே சண்டையிடுவது, கவர்ச்சி உடையில் தோன்றுவது போன்றவற்றை போட்டியாளர்கள் செய்வர்.. சேனலும் TRPகாக அதை வெட்கமின்றி ஒளிபரப்புவார்கள் .. Sex appeal இல்லாத போட்டியாளர்கள் அழுதல் சண்டையிடுதல் செண்டிமென்ட்டாக பேசுதல் என்று அவர்கள் தரப்பில் TRP ஏற்றுவார்கள்.. எல்லா இடத்திலும் கேமரா இருக்கும், பாத்ரூம் டாய்லெட்டில் மட்டும் இருக்காது என்கின்றனர் பிறகு நீச்சல் குளத்தில் மட்டும் கேமரா எதற்கு? இங்கு தான் டிவி சேனலின் TRP வெறியை நான் உணர வேண்டும்.. மாடல் அழகிகளும் சினிமா வாய்ப்பிற்காக இதைப் பயன்படுத்தி அரைகுறை ஆடையில் நீச்சல் குளத்தில் தோற்றம் அளிக்கத்தான் போகிறார்கள்.. இவ்வாறெல்லாம் நடந்தால் என்ன தவறுஎன்று சிலர் கேட்கலாம்.. A certificate வாங்கிய படங்களை டிவியில் ஒளிபரப்ப வேண்டுமென்றால் அதை U/A சான்றிதழ் வரும்படி Edit செய்த பின்னரே ஒளிபரப்ப வேண்டும் ஆனால் இது போன்ற நிகழ்ச்சிகளில் Censor என்ற ஒன்றே இல்லாத போது அவர்கள் செயல்களும் வார்த்தைகளும் அப்படியே காட்டப்படும் இது நம் சமூகத்தை கெடுப்பதாகவே இருக்கும்.. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் இன்று நிகழ்ச்சிக்கு வந்த 15 பேரில் அந்தப் பெண் மாடல் அழகியை தான் இவர்கள் நீண்ட நாட்கள் இருக்க வைப்பார்கள்.. ஆர்த்தி, காயத்திரி, அந்த ஜல்லிகட்டுப் பெண் போன்றவர்களை சண்டை மற்றும் Controversyக்கும் அனுயா,இனியா மாடலிங் பெண் போன்ற மூவரை கவர்ச்சிக்கும் பயன்படுத்தி விஜய் டிவிக்காரன் நன்றாக TRPஐ உயர்த்தப்பார்ப்பான்.. ரசிகர்களான நம்மிடமும் சில தவறுகள் உள்ளன.. பிறர் அந்தரங்கத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நமது மட்டமான சிந்தனையைத் தான் அவன் காசாக மாற்றுகிறான்.. கமல் இதற்கு நடுவர் என்பது தான் அதிர்ச்சியின் உச்சம்.. நிச்சயம் இந்த நிகழ்ச்சியின் உள்ளடக்கம் அறிந்து கமல் இதற்கு ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்.. தனிப்பட்ட கடன் தீரக் கூட இதில் வந்திருக்கலாம்.. தன்னிகரற்ற ஒரு கலைஞனை கடனில் வைத்திருப்பதும் நமது தவறு தான்.. ஆக Bigg Boss என்பது நமது வீட்டிற்குள்ளேயே வரும் ஆபாசம்.. குழந்தைகள் இதைப் பார்க்காது தடுப்போம் முடிந்தால் நாமும் தவிர்ப்போம்.. உண்மையென்றால் பகிரவும்..
Arun Kumar

FB

Leave a Reply