​நடிகர் அருண் விஜய் ஸ்டேஷனிலிருந்து தப்பி ஓட்டம்

 – சாதாரண வழக்கு சிக்கலான வழக்காக மாறுகிறது

நடிகர் அருண் விஜய் இன்று அதிகாலை அளவுக்கதிகமான போதையுடன் தனது மனவியுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வழியில் கார் கட்டுப்பாட்டை இழந்ததால் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வேன் மீது மோதியது.
இதில் வேனின் பின்பக்கம் சேதமடைந்தது. இதனால் போலீசார் அருண் விஜய் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆல்கஹால் அளவு 56% இருந்ததால் அவரை ஸ்டேஷனில் அமரவைத்து இருந்தனர்.
பின்னர் விஜயகுமார் ஸ்டேஷனுக்கு வந்தார். காலை 7 மணி அளவில் ஸ்டேஷனிலிருந்து மற்ற வேலைகளை முடித்து விட்டு பாண்டிபசார் போக்குவரத்து புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதில் அருண்விஜய் மீது போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அவரை மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர் படுத்தி அபராதம் கட்டி காரை எடுத்து செல்லும் படி கூறி இருந்தனர்.

இதனிடையே பாண்டிபசார் ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில் அருண்விஜய் தப்பி ஓடி விட்டார். போலீசார் அவரை காணோம் என்று தேடி வருகின்றனர். அருண்விஜய் மீது சாதாரண ஜாமீனில் வரக்கூடிய பிரிவின் கீழ் தான் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆனாலும் எங்கே மாஜிஸ்ட்ரேட் தன்னை கைது செய்ய உத்தரவிட்டு விடுவாரோ என்ற எண்ணத்தில் ஓடியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
தற்போது அருண் விஜய் தப்பி ஓடியதால் சிக்கலில் சிக்கியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் அவர்மீது கடுமையான வழக்கு பதியப்படும் அது அவருக்கு மேலும் சிக்கலை கொடுக்கும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply