பக்குவம்

​எம்.ஜி.ஆர்.தன் உதவியாளருடன் தோட்டத்திலிருந்து ஷூட்டிங் புறப்படுகிறார்.

காரில் ஏறியவர்-தன் உதவியாளரிடம் சொல்கிறார்?

தோட்டத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்?? நாம் திரும்பி வரும்போது இது ஜப்தி செய்யப்பட்டிருக்கலாம்??

இடி போன்ற அந்தச் செய்தியை கொடி போன்றதொரு குறும் புன்னகையோடு சொல்கிறார்!!

என்னங்க இவ்வளவு சாதாரணமாக சொல்றீங்க–என்ற கேள்விக்கு–பின்னே அலறி அடிச்சுக்கிட்டா சொல்லணும்??–செம்மலின் பதில்!!

ஈட்டிய பொருளை போட்டி போட்டு கொடுத்த உங்களுக்கா ஈட்டிக் காரன்??

என்ன செய்வது? சொந்தப் படம் எடுத்தாலே எனக்கு எப்போதும் பற்றாக் குறைதான்!!

உ.சு.வா வெளி நாட்டு ஷூட்டிங்கில் ஒரு நடிகை தன் சொந்த செலவில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டாங்க!! என் சொந்தப் படத்தில் நான் தான் செலவு செய்யணும்.என்றேன்.. அவ்வளவு தான்??

மறு நாள் அனைவரும் சாப்பிட்ட ஐஸ்க்ரீம் தொகை 84000 ரூபாய்??

[ நன்றாக கவனிக்கவும். 1972இல் 84000!!

நான் போட்ட அரங்குக்கு –ஒன்றுக்கு மூன்று மடங்கு தொகை தந்தேன்.ஷூட்டிங் முடிந்து ஹோட்டலை காலி செய்த இரவு அனைவரும் சாப்பிட்டதற்கான பில்லைப் பார்த்து அவங்களுக்கே மயக்கம் வந்துடுத்து?? இதை நான் பெருமையாகவோ வருத்தமாகவோ சொல்லலே. அவங்க என் மேல எடுத்துக் கிட்ட உரிமையும் நம்பிக்கையும் எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு–பார்க்கலாம்–குஞ்சப்பன் கிட்டே ஸ்டே [தடை ] வாங்க சொல்லியிருக்கேன்.

வந்தா தோட்டம்.!! இல்லைன்னா சத்யா ஸ்டூடியோவிலேயே குடும்பம் நடத்துவோம்–சலனமில்லாமல் சொல்பவர் சாதாரணமாக பேப்பர் படிக்க ஆரம்பிக்கிறார்??

எப்படிங்க உங்களாலே இவ்வளவு சாதாரணமா எடுத்துக்க முடியுது??–கேள்விக்கு-எம்.ஜி.ஆரின் பதில்–

வாழ்க்கையிலே எது நடந்தாலும் அதை ஏத்துக்கற பக்குவம் இருக்கணும்!! ஜனங்க என்னை பெரிய கோடீஸ்வரன் னு நினைக்கறாங்க–ஆனா நான் ஏழைன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்??–இப்படி சொன்ன எம்.ஜி.ஆர் அடுத்து சொன்னவை அவரைக் கெடுத்து பிழைத்தவர்களையும் நெகிழ வைக்கும்??

நான் ஒண்ணும் குபேர வீட்டுப் பிள்ளையில்லை?/

எனக்கு குடிசையிலும் வாழத் தெரியும். இப்போ கூட கண்ணாடி மூடிய காரில் பயணம் செய்யறேன் என்றால் அதுக்கு ஜனங்க தான் காரணம்?? என்னைப் பார்த்துட்டாங்கன்னா அன்புல என்னை பிய்ச்சு எடுத்துடுவாங்க!!

எங்க அம்மா எங்களை இரண்டனா பணத்தில் வளர்த்தாங்க!! இந்த ராமச்சந்திரனால இரண்டு ரூபாயிலே இப்போ வாழ முடியும்??–முத்தாய்ப்பாக சொல்கிறார்!!

ஆனால் என் மக்கள் என்னை ஏழையாக்க மாட்டார்கள்???

எப்பவுமே நாம் நீதிக்கு தலை வணங்கித் தானே தீரணும்?? –சொன்னவர்–உடனே ஒன்றை உரைக்கிறார்!!

அட இந்தத் தலைப்பிலேயே ஒரு படம் பண்ணலாமே??

அந்த வகையில் உருவானது தான்

நீதிக்கு தலை வணங்கு!!

ஆக—

எவ்வளவோ பேர்களின் வீட்டை மீட்டுக் கொடுத்தவரின் வீடு பறி போகும் நிலையில் இருந்தாலும்–

அவருடைய தர்மம்

அவர் வீட்டை மட்டுமல்ல–இந்த

நாட்டையும் அல்லவா அவரிடம் தந்தது??

எத்தனை ஆழமான அன்பும் நம்பிக்கையும் மக்கள் மேல் அவர் கொண்டிருந்தால்—

என்னை ஜனங்கள் ஏழையாக்க மாட்டார்கள் என்று சொல்லி இன்றளவும் நம் மனங்களில் கோடீஸ்வரனாகவே கொலு வீற்றிருப்பார்????

Leave a Reply