தர்மதுரை

நான் இன்னும் தர்மதுரை படம் பார்க்கவில்லை. இரு தினங்களுக்கு முன் அந்த படத்தின் “மக்க கலங்குதப்பா..” பாடலை  தொலைகாட்சியில் பார்த்துவிட்டு, என்னை பார்க்கச்சொல்லி  என் மனைவி பரிந்துரைத்தார். 
அப்புறம் என்ன..  யூ டியூப்பில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
ஆட்டம் போட வைக்கும் யுவன் இசை.. விஜய் சேதுபதியின் ஆட்டம், சில நொடிகள் வந்து ஆட்டம் போட்டுவிட்டு போகும் கரகாட்டப்பெண்ணின் நடைமொழி, பாடலின் இடையே வந்துப்போகும் இயக்குனர் சீனு ராமசாமியின் வசனங்கள் என ரசிக்க வைக்கும் பல விசயங்களில் அந்த பாடலில் இருக்கின்றன. 
அதில் எனக்கு மிகவும் பிடித்தது.. அந்த பாடலை பாடிய மதிச்சியம் பாலாவின் குரலும் முக பாவனையும்தான்.. சில முகங்களை பார்த்தவுடன் பிடிக்குமில்லையா.. அப்படியொரு திருத்தமான முகம் அவருக்கு. வெறும் பாடகராக இல்லாமல் நடிகராகவும் அவரது உடல்மொழி அட்டகாசம்.. 
திரையரங்கில் சென்று படம் பார்க்கும் ஆர்வத்தை உண்டு பண்ணிவிட்டது அந்த பாடல்.. 
நீங்களும் கேட்டு ஆட்டம் போடுங்க.. : 🙂

bala

Leave a Reply