தமிழகத்தை விட்டு வெளியேறு குடிகார குரங்கே – த்ரிஷாவை திட்டிய பிரபல இயக்குனர்…!

பீட்டா ஆதரவாளரான நடிகை த்ரிஷாவை இயக்குனர் ஒருவர் குடிகார குரங்கு என்று ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல அமைப்பான பீட்டாவின் ஆதரவாளர் நடிகை த்ரிஷா.

இதனால் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் த்ரிஷாவின் கர்ஜனை படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து பலரும் த்ரிஷாவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.

குடிகார குரங்கு
உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் நான் எப்பொழுதும் பணிந்ததும் இல்லை, பயப்பட்டதும் இல்லை என த்ரிஷா ட்வீட்டியிருந்தார்.

இதை பார்த்த இயக்குனர் சண்முகம், தமிழ்நாட்டை விட்டு வெளியேறு குரடிகார குரங்கே என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

த்ரிஷா
த்ரிஷாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் பாஸ்வேர்டை ரீசெட் செய்துவிட்டு ட்விட்டரை விட்டே வெளியேறிவிட்டார். ஜல்லிக்கட்டு விவகாரத்தால் த்ரிஷா ட்விட்டரை விட்டு வெளியேறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு
நான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக எதுவும் தெரிவித்தது இல்லை. நான் தமிழர்களையும், தமிழ் கலாச்சாரத்தையும் மதிப்பவள் என த்ரிஷா விளக்கம் அளித்தும் அவர் பேச்சை யாரும் நம்பவில்லை.

கமல்
ஜல்லிக்கட்டு தொடர்பாக ஆளாளுக்கு த்ரிஷாவை திட்டித் தீர்ப்பதை பார்த்த உலக நாயகன் கமல் ஹாஸன் அவருக்கு ஆதரவாக ட்வீட்டியுள்ளார். நண்பர் சிம்புவும் த்ரிஷாவுக்கு ஆதரவாக உள்ளார்.

tamilvoice

Leave a Reply