ஜோக்கர்

திருமூர்த்தி திடீர்னு திரைவிமர்சனம்

என் மனதில் நீங்கா இடைத்தை பிடித்த திரைபடங்கள் என்றால் ” வீடு, ஒன்பது ரூபாய் நோட்டு, வெயில், மாயாண்டி குடும்பத்தார், என்று சொல்லலாம்..

அந்த வரிசையில் இப்போது ஜோக்கரையும் சேர்த்து விடலாம்..
என்ன திருமூர்த்தி திடீர்னு திரைவிமர்சனம் பன்றீங்கனு கேட்குறீங்களா? 
ஆமாங்க இயற்கை சார்ந்த நல்விசயங்களை கொண்டு செல்ல வளையதளம் எப்படி உதவுகிறதோ அதே போல இந்த திரைபடத்தில் வரும் சம்பவங்கள் இளைஞர்களின் மனதில் பதியவைக்க இது போல திரைபடங்கள் நமக்கு அத்தியாவசிய தேவையே..
சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவர எப்படி பேஸ் புக், டிவிட்டர், ஊடகம் போன்றவைகள் இருக்கிறதோ அதே போல இந்த திரைகாவியமும் இளைஞர்களின் மனதில் தீப்பொறியை மூட்டும்..
பார்வையற்ற மனிதர்களின் அன்பை ‘குக்கூ’வில் சொன்ன இயக்குனர் ராஜூமுருகனின் இரண்டாவது படம் இந்த ‘ஜோக்கர்’.
கழிப்பறை கட்டினால் கல்யாணத்துக்குத் தயார் என்று குரு சோமசுந்தரத்திடம் சொல்கிறார் ரம்யா பாண்டியன்…
கழிப்பறை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார் சோமசுந்தரம். 

அதில் நடக்கும் கமிஷன் போன்றவைகள் அவரது வாழ்க்கையையே திசை மாற்றுகிறது. 
சோமசுந்தரத்துக்கு நடந்தது என்ன? 
அவர் என்ன ஆகிறார் என்பது மீதிக் கதை.
நகைச்சுவை செய்வது, 

அடுக்கடுக்கான  வசனம் பேசுவது, 

கை தட்டலுக்காக சில பன்ச் வசனங்களை புகுத்துவது என்று இல்லாமல் 

சமூகம், மனிதம், அரசியல், சுற்றுச்சூழல் என எல்லாவற்றிலும் நையாண்டியை அர்த்தமுள்ளதாக பதிவு செய்த விதத்தில் இயக்குனர் கவனிக்க வைத்ததாலே 

இந்த சினிமாவை நேற்று முன்தினம் இரவு புத்துச்சேரியில் என்னை பார்க்க வைத்தது..
 சாதாரண குடிமகனாக கேள்வி கேட்கும் தொனி, 

மு.ராமசாமியிடம் தோழமை அணுகுமுறை, காயத்ரி கிருஷ்ணாவிடம் முகநூல் அப்டேட் குறித்து விளக்கம் கேட்பது என அத்தனை அத்தியாயங்களிலும் சோமசுந்தரம் தனித்துத் தெரிகிறார்…
அவரது உடல் சார்ந்த மொழியும், 

இயல்பான வசன உச்சரிப்பும் மன்னர் மன்னன் பாத்திரத்துக்கு நூற்றுக்குநூறு பொருத்தமாக்கி இருக்கிறார்..
‘நாம ஓட்டு போட்டுதானே அவன் ஆட்சிக்கு வர்றான், 

அதுக்கு மட்டும் நமக்கு உரிமை இவருக்கு,  அவன் அநியாயம் பண்ணா அவனை டிஸ்மிஸ் பண்ண நமக்கு உரிமையில்லையா?’, 
‘சத்துக்குறைவினால 12 குழந்தைங்க செத்துப் போச்சு. 

மயக்க மருந்தை மாத்திக் கொடுத்ததால 2 கர்ப்பிணி பொண்ணுங்க செத்துப் போனாங்க 

கர்த்தரும் காப்பாத்தலை, 

மாரியம்மாளும் காப்பத்தலையே என்ற வசனம் மதவெறியர்களை திரையரங்கில் சத்தமில்லாமல் அமரவைத்துவிட்டது..
நகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?’, ‘
சகாயம் பண்ணுங்கனு சொல்லலை… சகாயம் மாதிரி பண்ணுங்க’னுதான் சொல்றோம் என சோமசுந்தரம் பேசும் வசனங்கள் அத்தனையிலும் ஆற்றாமை, ஆதங்கம், கோரிக்கையே குறுஞ்செலவில் வெளியே வந்த இந்த திரைபடம் பலகோடிகளை செலவுசெய்து வெளிவந்த திரைபட இயக்குனர்களை வாயடைக்க வைத்துவிட்டது..
கதாநாயகி பாத்திரத்துக்கு பொருத்தமான வார்ப்பு. 
கழிப்பறை இருந்தாதான் கல்யாணம் பண்ணிப்பேன் என கறாராக கதாநாயகி சொல்வது 

வரதட்சணையாக வாங்கிய மகிழ்வுந்தில் இந்த படத்தை பார்க்க வந்தவர்களுக்கு  செவில்அடி..!!
கூத்துபட்டரை, நாடக பேராசிரியர் ராமசாமி நாற்பதுகளில் பிறந்தவர்கள் என்பதை நிரூபித்துள்ளார்… 
ஒருகாட்சியில் 

‘அப்பல்லோவுக்கு எடுத்துட்டுப் போகணும் என்று சொன்ன மருத்துவரை பார்த்து ” “பிறகு எதற்க்கு எதுக்கு கவர்மென்ட்? 

ஓட்டை எல்லாம் அப்பல்லோவுக்கு குத்தலாமா? என்பது நிதர்சனம்..
இந்த ஜனங்க இப்படிதான். 

தீயவங்க பின்னாடி போகும். 

கெட்டவங்களை ஜெயிக்க வைக்கும். அபத்தங்களைக் கொண்டாடும். 

அதுக்காக நாமளும் அப்படியே பதவிக்கும் பவுசுக்கும் அடிமையாக முடியுமா’ என்று காசு கொடுத்து ஓட்டை வாங்கிய அரசியல்வாதிகளின் மண்டையிலும்,

குவாட்டருக்கும், கோழிபிரியானிக்காக ஓட்டை குத்தியவர்களின் நடுமண்டையில் ஓங்கி சமட்டியால் அடிக்கிறார்…  
செல்லத்துரையின் பாத்திரம் கதைப் போக்குக்கு உறுதுணை இருக்கிறது.

. ‘நீ ஒரு ரூரல் பியூட்டி டா’ என சோமசுந்தரத்துக்கு நம்பிக்கை ஊட்டுவது ரசனை. ‘இந்த நாட்ல வாழ்றதுதான் கஷ்டம்னு பார்த்தா… 

இப்போ பேள்றதையும் கஷ்டமாக்கிட்டானுங்களே “என்ற வசனம் வரும்போது பல லட்சங்கள் செலவுசெய்து கக்கூசுக்கு டைல்ஸ் ஒட்டுபவர்களை 

பொது கழிப்பிடத்தில் அமரவைத்துவிட்டது..
சிறைச்சால்லையில் ஒருவர்

 ‘ வெளியே கசகசன்னு இருக்கு, 

அதான் உள்ளே வந்துட்டேன்..

சம்மர்ல வந்துடுவேன்..

வின்டர்ல போய்டுவேன்’ எனச்சொல்லும் வசனம் அப்போது என்னை சிரிக்க வைத்தாலும் இப்போது சிந்திக்கவைக்கிறது…
ஆமை விடும் போராட்டம், , 

காறித்துப்பும் போராட்டம், 

பின்னால் நடக்கும் போராட்டம், 

வாயில் அடித்துக்கொள்ளும் போராட்டம், ஆணிப்படுக்கை போராட்டம்,

பண்ணாட்டு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம்,சுகாதாரத்தை வலியுறுத்த திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களுக்கு காலைவணக்கம் சொல்லும் போராட்டம்,

விஷபாம்பு போராட்டம்,

சாலை வசதி கேட்டு ரோட்டில் தவழும் போராட்டம், 

கோவணப் துணி போராட்டம் என்ற போராட்ட உக்போராட்டத்துக்கான நூதன வடிவ உத்திகள் இளைஞர்களை போராட்ட களத்திற்க்கு இழுத்து வருகிறது..
‘குண்டு வைக்கிறவன்லாம் விட்டுருங்க, உண்ட சோறு வாங்கி தின்னுட்டு கோயில்ல தூங்குறவன பிடிங்க’, என்ற வசனம் படம் பார்க்க வந்த காவலர்களுக்கானது…
இப்போது எல்லாம்  ஹீரோவைவிட வில்லனைத்தானே இந்த ஜனங்களுக்குப் பிடிக்குது’, 

உங்களுக்காகப் போராடுற எங்களைப் பார்த்தா பைத்தியக்காரன்னு தோணினா… அது எங்க தப்பில்ல!’ ஆகிய  வசனங்களுக்கு தியேட்டர் முழுக்க கைதட்டல்களை அள்ளினாலும் போராட்களத்திற்க்கு எத்தனை பேரை இழுத்து வரபோகிறது என்பது எனது நூறு ரூபாய் கேள்வி…!!!
‘சிவன் நெற்றியில் இருக்கும் பிறைதான் இஸ்லாமியர்களின் நம்பிக்கையாவும் இருக்கு, 

அப்படிப் பார்த்தால் இருவரும் முப்பாட்டன்கள்தான் என் தம்பிகளே,  உறவுகளே என்ற வசனமும், 

நம் ஒற்றுமைக்கு குறுக்கே எவன் வந்தாலும் அவர்களை நம்பி எடுப்பார்கள் என் தம்பிமார்கள்’ என்று ஒருவர் இப்தார் நோன்பில் பேசுவதும்,

தண்ணீர் பிரச்சினயில் இயற்கை சூறையாடல் என ஒருவர் கொந்தளிப்பதும், ஹெலிகாப்டருக்கு கும்பிடு போடாம அமைச்சர்கள் இருக்காங்களா? 

என கேள்வி கேட்பது போன்ற வசனங்கள் இயக்குனர் ராஜு முருகனின் தைரியத்தை பறைசாற்றுக்கிறது..
ஆக மொத்தம் “ஜோக்கர் “என்ற மன்னர் மன்னன் இறந்து

தூங்குபவர்களை தட்டி எழுப்பியுள்ளார்…
இந்த திரைபடத்தை பார்த்தால் உங்களுக்கே புரியும்

நமக்கு சுதந்திரம் கிடைத்து இன்றோடு எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டதா? 

இல்லையா என்று…!!!

Leave a Reply