சில நறுக் வசனங்கள்-ஜோக்கர்

ஜோக்கர் படத்தில் பலர் மறைமுகமாக அல்லது நேரடியாக வந்து போவர். திமுக கருணாநிதி, அதிமுக ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள், தேமுதிக விஜயகாந்த், பாமக ராமதாஸ், நாம் தமிழர் சீமான், மத மாற்றம் செய்பவர்கள், டிராபிக் ராமசாமி, வைகுண்டராஜன், சகாயம், சட்ட பஞ்சாயத்து இயக்கம், சசி பெருமாள், மதுரை நந்தினி, உலக மயமாக்கல், கல்யாண் ஜூவல்ர்ஸ், டைம் பாஸ், அப்துல் கலாம், ஹிந்தி திணிப்பு, பிஜெபி மோடி, வழக்கறிஞர், காவலர், அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம் என கடைசியாக இதை அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்க்கும் பொது மக்கள்…

 

கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.. சில நறுக் வசனங்கள்…
1. தமிழ்நாட்டில 356 சட்ட பிரிவை பயன்படுத்தனும்னு சொல்ற ஆதங்கம்.

 

2. தேர்ந்தெடுத்த MP க்கள் பார்லிமென்டில் கட்சி சண்டை போடுதல், முகஸ்துதி பாடுதல், பார்லிமென்ட் வாக் அவுட்.

 

3. மினிஸ்டர் மச்சான் வீட்டு ஃபங்ஷன்ல திருட்டு கனக்ஷன் எடுத்த அவன உள்ள தள்ளு.

 

4. போக்குவரத்தை நிறுத்தி பப்ளிக்க இடைஞ்சல் பண்ணாதீங்க.

 

5. பெப்சிய பார்த்து இந்த விஷத்த தான் தடை பண்ணியாச்சே.

 

6. நடிகர்களின் ஃப்ளக்ஸ், அரசியல் வாதிகளின் சுய விளம்பர ஃப்ளக்ஸை கிழிப்பது.

 

7. அடிபட்ட வாயில்லா ஜீவனுக்கு நஷ்ட ஈடு.

 

8. அரசாங்கத்தை ஏமாற்றி மணல் அள்ளுவதை நிறுத்தணும்.

 

9. இலவச மிக்சி, கிரைண்டர் கொடுத்து மக்கள சிந்திக்க விடாம பண்ணா 2020 இந்தியா எப்படி நல்லரசு ஆகும்.

 

10. ஆத்து மணலை அள்ளி அள்ளி தண்ணியெல்லாம் புளோரைடு.

 

11. நீங்கள் ஒன்னும் எங்களுக்கு சகாயம் பண்ண வேணாம். சகாயம் மாதிரி பண்ணா போதும்.

 

12. கர்த்தர் எப்படி காப்பாத்துவார்? இதே ஆஸ்பித்திரில சத்து குறையால 12 குழந்தைங்க செத்து போச்சு. 2 கர்ப்பிணி பொண்ணுங்க செத்து போச்சு. கர்த்தரும் காப்பாத்தல. மாரியம்மாளும் காப்பாத்தல. கவர்ண்மென்ட் தான் காப்பாத்தணும்.

 

13. சீஃப் டாக்டர் ஏன் வரல. அவரு ஒத்தக்கடை தெருல இருக்கற அவரது கிளினிக்ல எவனையாவது பிடிச்சி வச்சு 28 டெஸ்ட் பண்ணிட்டு இருப்பாரு.

 

14. கவர்ண்மென்ட் டாக்டர் அப்போல்லோ ஆஸ்பித்திரிக்கு கொண்டு போங்கனு சொன்னா, எங்க ஓட்ட எல்லாம் அப்போல்லோ காரனுக்கு குத்தலாமா.

 

15. நிவாரணம்னு சொல்லி பாதி காசு தான் கைக்கு வந்துச்சு.

 

16. கேஸ்னு புடிச்சிட்டு போற வண்டில இருந்து டயர காணோம். ஆடி காரையோ BMW காரையோ இத மாறி பண்ண முடியுமா.

 

17. பல வகையான போராட்டங்கள்:

1. ஆற்று மணல் திருட்டை எதிர்த்து reverse walk போராட்டம்,

2. காவல் துறையின் காட்டு தர்பாரை எதிர்த்து விலங்கு தாவும் போராட்டம்,

3. சாலை வசதி கேட்டு ரோட்டில் தவழும் போராட்டம்,

4. ஊழல் செய்யும் சட்ட மன்ற உறுப்பினரை காரி துப்பும் போராட்டம்,

5. ஜாதி மறுப்பு திருமணத்தை ஆதரித்தல்,

6. விளை நிலங்களை அபகரிக்கும் செயலை எதிர்க்கும் குளோபல் போராட்டம்,

7. பள்ளி குழந்தைகளின் கல்வி கட்டணத்தை எதிர்த்து வாயில் அடித்து போராட்டம்,

8. ரேஷன் அரிசி பதுக்கலை கண்டித்து வாய்க்கரிசி போராட்டம்,

9. விவசாயிகளின் வாழ்வுரிமையை காக்க கோவண போராட்டம்,

10. பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு நடன போராட்டம்,

11. முறைகேடு குவாரிகளை எதிர்த்து புதை மணல் போராட்டம், தாலிக்கு தங்கம் தாலியறுக்க டாஸ்மாக் – மதுவிலக்கு போராட்டம்,

12. குடியால் கணவனை இழந்த பெண், பொட்டு வைத்து கொண்டு மதுவை எதிர்த்து போராட்டம்

 

18. விஷப்பாம்புகளிடம் போராட்டம் அறிவித்து களம் இறங்கிய போது, அந்நிகழ்வை வேடிக்கை பார்க்கும் பொது மக்கள் மற்றும் அதை வீடியோ எடுக்கும் மீடியாக்கள்.

 

19. சிவனின் பிறைக்கும், இஸ்லாத்தின் பிறைக்கும் முடிச்சு போட்டு முப்பாட்டன் என்று கூறும் ஒரு கூட்டம்

 

20. பாடி மியூசிக் போராட்டத்தின் போது பல மக்கள் ஜனாதிபதி பேசியவை.

1. நூடுல்ஸை தடை பண்ணது சைனா காரனுக்கு பிடிக்கல…

2. கூல் ட்ரிங்க்ச தடை பண்ணது அமெரிக்கா காரனுக்கு பிடிக்கல…

3. ஹெலிகாப்டர பாத்து கும்மட வேணாம்னு சொன்னது அமைச்சர்களுக்கு பிடிக்கல…

4. அரைநாள் உண்ணா விரதத்திற்கு ஏர் கூலர் எடுத்து போக வேணாம்னு சொன்னது எதிர் கட்சிக்கு பிடிக்கல…

5. வாரிசு அரசியலுக்கு தடை, கூட்டணி தாவலுக்கு தடை, நாக்கை துறததுவதுக்கு தடை, காலேஜ் கட்டறதுக்கு தடை, சொத்து குவிப்பிற்கு தடை, சாதி கட்சி மாநாட்டிற்கு தடை, குண்டலினி சாமிக்கு தடை,..

6. நகை கடை காரன் புரட்சி பண்ற இந்தியாவுல ஜனாதிபதி புரட்சி பண்ண கூடாதா?

7. நாட்டோடு வறுமை சத்தம், நாட்டோடு உரிமை சத்தம் என்று சொல்லி கொண்டிருக்கும் போது குஷ்பூ பென்னாகரம் வந்த செய்தியை கவர் பண்ண மீடியாக்கள் சென்று விட்டனர். கடைசியாக இருந்து ஓர் மீடியாவும் உங்களோட செய்தியை டைம் பாஸ் பத்திரிக்கைல போடறோம்னு சொல்லுவாங்க.

 

21. ஜனாதிபதி ஆட்சி நடக்கும் போது அவ்வபோது பிரதமர் ஆட்கள் யாராவது குழப்பறாங்களானு எப்போதும் ஒரு கேள்வி.

 

22. ஆளுங்கட்சி முதல், எதிர்க்கட்சி, அனைத்து கட்சிகளும் ஆட்களை எவ்வாறு மாநாட்டிற்கு அழைத்து வருகிறார்கள் என காட்ட படுகிறது.

 

23. மதுவிலக்கு பேசும் மாநாட்டில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்கு பிரியாணி, மது வழங்க படுகிறது.

 

24. காதலிக்கும் பெண் கழிப்பறை வசதி உள்ளதா என தேடும் கண்கள்.

 

25. அரசாங்க திட்டம் மூலம் கழிப்பறை கட்ட நினைத்தால், கலர் காலரா கதவை மட்டும் மாற்றி போட்டோ எடுத்து ஏமாற்றும் அதிகார வர்க்கம். இந்த நாட்டில வாழறது தான் கஷ்டம்னு நினச்சா, பேளரதும் கழ்டம்னு சொல்லும் போது அந்த வலியை உணர முடிகிறது.

 

26. ஜனாதிபதி வருவதால் அவசரம் அவசரமாக ஒரு இடத்தில மட்டும் கழிப்பறை கட்டுவது.

 

27. கிராமத்து மக்களை நமஸ்தே என ஹிந்தி பேச சொல்வது.

 

28. அரைகுறையாய் கட்டி முடிக்க பட்ட கழிப்பறை இடிந்து விழுவதால் ஏற்படும் பாதிப்பு.

 

29. பாதிக்க பட்டவரை உரிய நேரத்தில் மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல முடியாத காவலர்களின் ஜனாதிபதிக்கு தரும் பந்தோபஸ்து.

 

30. தூய்மை இந்தியா என்று நாடக தன்மையை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுவது.

 

31. உச்ச நீதி மன்றத்தில் ஊழல் இல்லாம ஒரு கக்கூஸ் கட்ட வக்கில்லை. உங்க கிட்ட கருணையை எதிர்பார்த்தது தப்பு தான்.

 

32. பொன்னுஞ்சல் கடைசியாக பேசும் போது, என் குடும்பத்தை பார்த்து 20 வருஷம் ஆகுது.

1. இங்க நடக்கற அநியாயத்தை பார்த்துட்டு சும்மா போக முடியல.

2. கொடும என்னென்னா நாம யாருக்காக போராடறோமோ, யாருக்காக செத்து போறோமோ, அவங்களே நம்ம காமெடியானா பாக்குறாங்க.

3. இந்த சமூகமே இப்படி தான், கெட்டவங்க பின்னாடி போகும், கெட்டவங்கள ஜெயிக்க வைக்கும், பணத்துக்கு ஓட்ட விக்கும்.

4. பணத்துக்கும், பவுசுக்கும் போக நினைக்கிறதுக்கு பதில் பீய திங்கலாம்.

5. எங்களை பயித்தியம்னு சொல்ற மக்களே.

6. இங்க ஜாதி, மதம், அரசியல்னு எல்லாத்தையும் வச்சு அடிச்சி திங்கறான்.

7. சக மனுஷன்னு பாக்காம சுயநலத்தால் சுரண்டி பொழைக்கிறான்.

8. அதிகாரத்தையும், பதவியையும் வச்சு கழுத்து அறுத்து போடறான்.

9. இயற்கையை கூறு போட்டு விக்கிறான். மரம் வைக்கறவன பார்த்து சிரிக்கிறான்.

10. பெத்தவளையும், கட்டினவளையும் விக்கறது போல, ஓட்ட விக்கிறான்.

11. எல்லாத்தையும் வேடிக்கை பாத்துட்டு மந்த மந்தையா வாழ்ந்துட்டு சாகுரிங்க. நீங்க பைத்தியம் இல்ல. நாங்க பைத்தியம் தாண்டா சாமி.

12. அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும் தின்னட்டு போடும் எச்சை தான் நமக்கு வருது.
33. கடைசியாக போராட வீதிக்கு வா தோழா என முடிகிறது.

 

சமூக மாற்றம் / அரசியல் மாற்றம் போன்றவற்றிற்கு சமூக களப்பணியில் பங்கேற்க விரும்புபவர்கள்(மக்கள் பார்வையில் JOKER), தங்களின் தகவல்களை கீழே உள்ள லிங்க்கை click செய்து பூர்த்தி செய்யவும். வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்க விரும்புவோரும் தங்களின் விருப்பத்தை கீழே உள்ள லிங்க்கை click செய்து பூர்த்தி செய்யவும். ஏற்கனவே பூர்த்தி செய்தவர்கள், மறுபடியும் பூர்த்தி செய்ய வேண்டாம்.

 

https://goo.gl/82iPAo

 

நன்றி,

இளையதலைமுறை

Leave a Reply