குற்றமேதண்டனை

மணிகண்டன், #காக்காமுட்டை மணிகண்டன் ஆவதற்கு முன் ஒப்புக்கொண்டு, 2014ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு, நேற்று வெளியாகியிருக்கும் படம் #குற்றமேதண்டனை. 
ஒரு குற்றம் நடைபெறுகிறது. இவர்களைச் சுற்றி நடக்கிற அந்தக் குற்றத்தின் காரணி யார், அவர்கள் பிடிப்பட்டார்களா, அவர்களுக்கான தண்டனை என்ன என்பதை மெலோ ட்ராமாவாக கொண்டுபோயிருக்கிற படம்தான் குற்றமே தண்டனை.
விதார்த் நடிப்பு குட். நேர்பார்வையில் மட்டுமே பார்க்கமுடிகிறது என்பதற்கான சின்ன சின்ன நுணுக்கமான நடிப்பை நேர்த்தியாக தந்திருக்கிறார் விதார்த். சில காட்சிகள் மட்டுமே என்றாலும் பார்வையிலேயே ஸ்கோர் செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ், விதார்த்தின் மனசாட்சி கேட்கும் கேள்வியாக உருவாகியிருக்கும் நாசரின் கதாபாத்திரம் மற்றும் குற்றத்தில் சிக்கி தவிக்கும் ரகுமானின் எக்ஸ்ப்ரஷன் என்று அனைவருமே நடிப்பில் நேர்த்தி. இறைவியில் மார்டன் பெண்ணாக வந்த பூஜா, அப்படியே நேரெதிரான நடிப்பில் கச்சிதம்.
படத்தின் இரண்டு ப்ளஸ் இசையும், ஒளிப்பதிவும். பாடல்கள் இல்லை. டைட்டில் கார்டில் ஆரம்பித்து, ஒவ்வொரு காட்சியிலும் வெரைட்டியான பின்னணி இசையில் படத்துடன் நம்மை இணைக்கிறார் இளையராஜா. க்ரைம் சீன், விதார்த்தின் எண்ணங்கள் அலைபாய்வது, ரகுமானின் குழப்பங்கள் என்று ஒவ்வொன்றையும் இசையில் கடத்துகிறார். படத்தின் பெரிய பலமாய் இசை இருக்கிறது.
#குற்றமேதண்டனை: ★★★★✰

Leave a Reply