2018 புத்தாண்டு ராசி பலன்கள்: ரிஷபம்

2018 புத்தாண்டு ராசி பலன்கள்: ரிஷப ராசிக்காரர்களே ஆரோக்கியத்தில் அக்கறை தேவை!
????▶▶????
புத்தாண்டு இன்றும் இரு வாரங்களில் பிறக்கப் போகிறது. 2017ஆம் ஆண்டு முடியப்போகிறது. 2018ஆம் ஆண்டில் நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காகவே இந்த புத்தாண்டு ராசி பலன். கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றும் வல்லமை படைத்த ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
2017ல் செப்டம்பர் மாதத்தில் இருந்து 6 ஆம் இட குருபகவனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கஷ்டமான சூழ்நிலை நிலவுகிறது. அதே போல ஆண்டு அட்டம சனியும் அல்லல்படுத்துகிறது. உடல்நிலை ஒருபக்கம் வாட்டி வதைக்க,மன உளைச்சல் ஏற்பட்டு படாத பாடு படுத்துகிறது.
2018ஆம் ஆண்டு குரு, சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் பெயர்ச்சியடையாமல் அதே இடத்தில் நீடிக்கிறது. ஆனாலும் கவலை வேண்டாம் குரு பகவான் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெயர்ச்சியடைகிறது.
..
2018 ரிஷப ராசிக்கு எப்படி?
ரிஷப ராசிக்காரர்களே 2018ஆம் புத்தாண்டு கிரக அமைப்புப்படி பார்த்தால் உங்கள் ராசிக்கு 3ஆம் இடமான கடகத்தில் ராகு, 6ஆம் இடமான துலாம் ராசியில் குரு, 8ஆம் இடமான தனுசில் சனி பகவான், 9ஆம் இடமான மகரத்தில் கேது என கிரகங்கள் அமைந்துள்ளன. சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மற்றவர்களை கவரும் ஆற்றல் கொண்டவர். ராகு பகவான் 3ல் இருக்கிறார். எதிர் நீச்சல் போட வேண்டிய ஆண்டு. ராசிக்கு 3ஆம் இடத்தில் அமர்ந்துள்ள ராகுவினால் சகோதரர்களால் நன்மை, உறவினர்களால் நன்மை ஏற்படும். சில நேரங்களில் பிரச்சினைகள். சந்திரனுடன் ராகு இணைந்து சஞ்சாரம் செய்வதால் அடிக்கடி பயணம் ஏற்படும்.

..
கவனம் தேவை
உங்கள் ராசிக்கு 4ஆம் அதிபதியாக வரும் சூரியனால் நன்மையே ஏற்படும். சொத்து வீடு, வண்டி வாகனங்கள் வாங்கலாம். 6 ஆம் இடத்தில் குரு அமர்ந்துள்ளதால் சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும், சிறுநீரக கல், போன்றவைகள் ஏற்படும். 7 ஆம் அதிபதியான செவ்வாயினால் திருமண தடைகள் நீங்கும். அட்டம சனியால் அவசரப்பட வேண்டாம். உங்கள் ராசிக்கு 8ஆம் அதிபதி 6ல் இருக்கிறார் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கடன் வாங்க வேண்டாம்.

..
பள்ளி மாணவர்கள் கவனம்
ராசிக்கு 9ஆம் அதிபதி 8ல் அமர்ந்துள்ளதால் வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். 10ஆம் அதிபதி சனி பகவான் 8ல் அமர்ந்துள்ளதால் பள்ளி மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்கவும். அரசு வேலை வாய்ப்பு தேர்வு எழுதுபவர்கள் கவனமாக படிக்க வேண்டும். ராசிக்கு 12ஆம் அதிபதியான செவ்வாயினால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

..
பெண்களுக்கு சிறப்பான ஆண்டாகும். விருப்பங்கள் பூர்த்தியாகும். குலதெய்வ கோவிலுக்கு சென்று தரிசனம் அவசியம். புதன்கிழமை வில்வ இலை மல்லிகையால் அர்ச்சனை, விநாயகருக்கு அருகம் புல் மாலை போட வேண்டும். சனிபகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றவும்.

பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். உணவு விசயத்தில் வாயை கட்டவும். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள்
குடும்ப உறுப்பினர்கள் பெயரில் தொடங்கவும். அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும். பெண்கள் ஆரோக்கியத்தில் அக்கறை, குரு ஆண்டில் தொடக்கத்தில் 6ஆம் இடத்தில் இருப்பதால் நெருக்கடி அதிகரிக்கும். அக்டோபர் மாதத்தில் குருபகவான் ராசிக்கு 7ஆம் இடத்திற்கு இடமாற்றம் அடைகிறார். இதனால் எண்ணங்கள் எளிதில் கைகூடும். மகிழ்ச்சி எற்படும்.

..
புதிய தொழில் வாய்ப்பு:
ராகுவின் வலுவான நிலையினால் எந்த வித பிரச்னைகளையும் துணிவுடன் சந்திப்பீர்கள். அரும்பாடுபட்டு எடுத்த காரியங்களை முடிப்பீர்கள். வீண் அலைச்சல் மற்றும் வேண்டாத பிரச்னைகள் இருக்கும். உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக விளைவுகள் இருக்கும். வியாபாரிகள் பண சம்பந்தமான எந்த விஷயமும் பல முறை யோசித்து செய்தால் நல்லது. புதிய கூட்டோ அல்லது முதலீடோ வருட இறுதியில் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

உங்களுக்கு நல்ல நேரமோ, கெட்ட நேரமோ எது நடந்தாலும் நன்மையே நடக்கச் செய்வது என்பது இறுதியில் இறைவன் கைகளில்தான் உள்ளது. ஆஞ்சநேயருக்கு தினமும் பூஜை, ஆராதனை செய்யுங்கள். செவ்வாய்கிழமையன்று சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு கோவிலில் விளக்கு ஏற்றவும். சனிக்கிழமை தோறும் நவகிரஹ சன்னதியில் சனீஸ்வரனுக்கு எண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.

Leave a Reply