​ராகு-கேது பெயர்ச்சி எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டம்  27.07.17

​ராகு-கேது பெயர்ச்சி எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டம், பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் எவை?, 
வழிபாட்டுத் தலங்கள் என்னென்ன? என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
கடந்த வருடம் இராகு கேது பெயர்ச்சியானது 08.01.2016 அன்று நிகழ்ந்தது. 
இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவரவருக்கு ஏற்றப் பலன்களையும், பிரச்னைகளையும் சந்தித்திருப்பார்கள். 
அதே போன்று இந்த வருடம் 27.07.17 அன்று #இராகு_கேது மீண்டும் பெயர்ச்சி அடைகிறது.
ஹேவிளம்பி வருடமான 2017-ம் ஆண்டு ஆடி 11-ம் தேதி (ஜூலை 27) வியாழக்கிழமை அன்று #சுக்ல_சதுர்த்தியும், #உத்திர_நட்சத்திரம், சித்த யோகம் கொண்ட நாளில் துலா லக்னத்தில் ராகு பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும், கேது பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும் இடம் பெயர்கின்றது.
நவக்கிரங்கங்களில் ராகுவும், கேதும் சாயக் கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். 
இந்தக் கிரகங்களை #பின்னோக்கிச் சென்று பெரும்பலனை நமக்கு அள்ளித் தந்தால் தான் நாம் முன்நோக்கிச் செல்ல முடியும்.
ஒருவருடைய ஜாதகத்தில் ராகு பலம் பெற்று அமைந்தால் அவர்களுக்கு ராகு பலன்களை அள்ளிக் கொடுப்பார். 
அவர்கள் நல்ல பொருளாதார நிலையை அடைவார்கள். 
அதே போல் ஒருவர் ஜாதகத்தில் கேது பலம் பெற்று அமைந்தால் நல்ல அறிவாற்றல் கிடைக்கும்
ஒருவர் ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் ராகு கேது இருந்தால் திருமணத் தடை, புத்திர பாக்கிய தடை, குடும்ப ஒற்றுமை குறைவு போன்றவை ஏற்படும்.
இந்த ராகு கேது பெயர்ச்சியினால் ஒவ்வொரு இராசிக்காரர்களுக்கும் பலவிதமான பலன்கள் இருக்கும். இந்தப் பெயர்ச்சியால் எந்த இராசிக்காரர்கள் பலன் அடைகிறார்கள் என்று பார்ப்போம்.
#பெயர்ச்சியால்_நன்மை_அடையும்_ராசிகள்:

மேஷம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, கும்பம்
இந்த ராசிக்காரர்கள் அனைவருக்கும் பாராட்டு, நினைத்த காரியங்கள் எளிதில் கைகூடல், நல்ல தொழில் என அனைத்து வகையிலும் முன்னேற்றம் காண்பார். 

இதுவரை இருந்த பிரச்னைகள் நீங்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.
#பெயர்ச்சியால்_பரிகாரத்தின்_மூலம்_நன்மை_அடையும்_ராசிகள்:

ரிஷபம், மிதுனம், கடகம், விருச்சிகம், மகரம், மீனம்
இந்த ராசிக்காரர்கள் தெய்வ சன்னதிகளுக்குச் சென்று வழிபட்டு வந்தால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நாள் பார்த்து வழிபட்டால் கோள்கள் கூட நற்பலன்களைத் தர வாய்ப்புள்ளது.

#வழிபாட்டுத்_தலங்கள்:
திருநாகேஸ்வரம், 

திருப்பாம்புரம், 

திருவாலங்காடு, 

திருச்செங்கோடு 

போன்ற தலங்களில் 

இராகு, கேது பெயர்ச்சியன்று முறையாக வழிபட்டு வாழ்க்கையில் வளம் பெறலாம்.

Leave a Reply