​கோவில்களில் காம சிற்பங்கள் இருப்பதற்கான காரணம் என்ன?

கோவில்களில் ஆபாச சிற்பங்களை தமிழன் ஏன் வடித்துள்ளான் ?. இப்படி ஆபாசமான சிற்பங்கள் கோவில்களில் இருந்தால் மனம் அலைபாயாதா? இறைவனை தரிசிக்க கோவிலுக்கு வருபவர்களுக்கு இந்த சிற்பங்கள் சங்கடத்தை எற்படுத்தாதா? இப்படி பல கேள்விகள் நம் மனதில் எழத்தான் செய்கிறது. இதை பற்றி சற்று விரிவாக பாப்போம் வாருங்கள்.
அந்த காலத்தில் வடித்த சிற்பங்களை எல்லாம் நாம் வெறும் காட்சி பொருளாக பார்த்து விட முடியாது. அதை வாழ்வியல் குறியீடுகளாகவும், வரலாற்று குறியீடுகளாகவும், ஞானத்தின் குறியீடுகளாகவுமே பார்க்க வேண்டும்.
இந்த காலத்தை போல அந்த காலத்தில், காமத்தை பற்றி யாரிடமும் வெளிப்படையாக பேசவும் முடியாது அதே சமயம் அதை பற்றிய நுணுக்கங்களை அறிவதற்கான எந்த அறிவியல் தொழில் நுட்பமும் கிடையாது. அப்படி இருக்கையில் ஒரு பெண்ணோ அல்லது ஆணோ காமத்தை பற்றி அறிய வேண்டும் என்றால் இது போன்ற சிற்பங்கள் வழியாக தான் அறிய முடியும். இதனால் தான் அக்காலத்தில் புதுமண தம்பதிகளை கோவில் குளங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். காமம் போன்ற வாழ்வியல் முறைகளை பற்றி மறைமுகமாக விலகும் ஒரு ஆசானாகவே அந்த சிற்பத்தை பார்க்க வேண்டுமே தவிர அதை காமமாக பார்க்க கூடாது.
அதோடு வெறும் காமத்தை சொல்லித்தரும் சிற்பங்கள் மட்டுமா கோவில்களில் உள்ளது? கூடவே யோகியரும்,முனிவர்களும், உழவர்களும்,குறவர்களும்,அவதாரங்களும், கர்ப்பிணி பெண்டிரும், நாகதேவதைகளும், யட்சணிகளும், கந்தர்வர்களும்,அரசர்களும் என பலரின் சிற்பமும் அல்லவா கோவில்களில் உள்ளது. அப்படி இருக்கையின் உடலுறவுச்சிலைகளை மட்டும் தவிர்ப்பது சரியான முறை ஆகாதே.
கோவில் என்பது வெறும் முனிவர்களுக்கு மட்டுமானது அல்ல அது அணைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது என்பதையே இது உணர்த்துகிறது. அதோடு காம காட்சிகளை சொல்லும் இந்த சிலைகள் அனைத்தும் கோபுரத்தின் உச்சியில் இருப்பது கிடையாது. மாறாக இது கீழ் விரிசையிலே உள்ளது.
ஆகையால் கோபுரத்தை முழுமையாக பார்க்க நினைக்கும் ஒருவரின் பார்வை இந்த சிலை மீது விழும்போது அவர் தன் மனதை கட்டுப்படுத்தினால் மட்டுமே தன் பார்வையை இந்த சிலைகள் மீதிருந்து விலக்கி கோபுரத்தின் உச்சியை பார்க்க முடியும். ஆகையில் இந்த சிலைகள் ஒருவித மன கட்டுப்பாட்டையும் மனிதர்களுக்கு சொல்லி தருகிறது என்றே கூறலாம். அதோடு மனதை கட்டுப்படுத்தும் ஒருவராலேயே வாழ்வின் உச்சிக்கு செல்லமுடியும் என்ற தத்துவத்தையும் இது எடுத்துக்கூறுகிறது.

Leave a Reply