​எறும்புக்கு உணவிடும் சூட்சும பரிகாரம்

ஒவ்வொரு எறும்பும் தனக்கு உணவு இட்டவர்களுக்கு ஒரு நிமிடம் தவம் செய்கிறது. குறிப்பாக கோயில், கோயிலைச் சுற்றி உள்ள
 இடங்களில் வாழ்கின்ற எறும்புகள் கோயிலுக்கு வருகின்ற 
பக்தர்களை நம்பியே வாழ்கின்றன. எனவே, ஒவ்வொருவரும் 
தினந்தோறும் கோயிலுக்கு செல்லும் போது சிறிதளவு
 ரவை,கோதுமை/அரிசி குருணையுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து 
அங்குள்ள எறும்புகளுக்கு உணவிட வேண்டும்.
அன்றைய பொழுதிற்கு உணவு கிடைக்கப் பெற்ற எறும்புகள் 

மனநிறைவுடன் நமக்காக ஒரு நிமிடம் தவம் செய்து அந்த தவப் பலனை நமக்கு அளிக்கின்றன. அதனால் நம் குடும்பத்தில் என்றுமே உணவிற்கு பஞ்சம் ஏற்படாது. ஒற்றுமை அதிகரித்து அமைதி நிலவும்.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த தானியம் உண்டு. குறிப்பிட்ட
 தெய்வத்தின் அருளைப் பெற அதற்க்குரித்தான தானிய ரவைகளையே

 கோயில் எறும்புகளுக்கு உணவாக இட வேண்டும்.
அன்னபூரணி – அரிசி
முருகன் – கேழ்வரகு
பிரகஸ்பதி – கோதுமை
சந்திரன் – உளுந்து
சூரியன் – கடலைப் பருப்பு
ராகு – கம்பு
புதன் – சோளம்
செவ்வாய் – துவரை
குரு – கடலை
சனி – எள்   ,

குருஜி

Leave a Reply