ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் கோவிலின் பெருமைகள்

புதுவை என்றால் நம் அனைவருக்குமே பாண்டிச்சேரிதான் நினைவுக்கு வரும்;

தமிழ்நாட்டில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு புதுவை என்ற பெயரில் ஒரு கிராமம் இருந்தது.அந்த கிராமமே பிற்காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற பெயரில் நகரமாக மாறியது.

ஸ்ரீவில்லிபுத்தூரின் தெற்கு எல்லையில் அருள்மிகு வைத்தியநாதசுவாமி சிவகாமி அம்பாள் கோவில் அமைந்திருக்கிறது.இந்தக் கோவிலின் பழைய பெயரே புதுவை ஆகும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தில் சிவகெங்கைத்தீர்த்தம் என்ற பெயரில் ஒரு குளம் இருக்கிறது.

ஜீரத் தேவர் இங்கே தான் இருக்கிறார்.விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் பழமையான சிவாலயம் இது மட்டுமே!

வன்னி மரமே இந்தக் கோவிலின் தல விருட்சமாக இருக்கிறது.ஆறு அடி உயரமுள்ள நடராஜர் இங்கே தெற்கு நோக்கி இருந்து அருள்பாலித்து வருகிறார்.

இங்கே மூலவராகிய வைத்தியநாதசுவாமி சன்னதியின் இடது பக்கத்தில் சூட்சுமரூபமாக இருந்து அருள்பாலித்து வருபவளே இந்த மனோன்மணி!!!

இங்கே ஒவ்வொரு புரட்டாசி1 ஆம் நாள் மற்றும் பங்குனி 1 ஆம் நாளில் சூரியனின் கதிர்கள் மூலவராகிய வைத்தியநாத சுவாமி மீது படுகின்றன.

புரட்டாசி மாதத்திற்கும் முன்னோர்களின் பித்ரு வழிபாட்டிற்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பதை இந்த நேரத்தில் மறக்காதீர்கள்:

இங்கே ஒரே கல்லினால் ஆன ஸ்ரீசக்கரம் திரு.சிவகாமிஅம்பாள் சன்னதிக்கு எதிரே வெளிப் பிரகாரத்தில் விதானத்தில் செதுக்கப்பட்டுள்ளது.இந்த இடத்தில் அமாவாசையும்,குரு ஓரையும் சேர்ந்த நாளில் ஓம்சிவசிவஓம் ஜபித்து வர வாலை தரிசனம் கிடைக்கும்;

உங்களில் யாருக்காவது நீண்டகாலமாக தீராத காய்ச்சல் அல்லது இருதய நோய்/வலி,மாரடைப்பு நோய் இருக்கிறதா?இங்கே மூலவராகிய வைத்தியநாதசுவாமி சன்னதியின் துவார பாலகராக இருக்கும் ஜீரத்தேவருக்கு( தற்போது ஸ்ரீகாளர் என்று எழுதி வைத்துள்ளார்கள்) 11 வியாழக்கிழமைகளுக்கு வால் மிளகில் பசும்பால் விட்டு கலந்து பற்றுப் போட்டு வர வேண்டும்.எப்பேர்ப்பட்ட நோயாக இருந்தாலும் குணமாகிவிடும்.கடந்த நூறு ஆண்டுகளாக பல ஆயிரம் பேர்களுக்கு குணமாகியிருக்கின்றன.

பிரம்ம கைவர்த்த புராணத்தில் இந்த புதுவைத்தலத்தை(அருள்மிகு வைத்தியநாதசுவாமித் திருகோவில்,ஸ்ரீவில்லிபுத்தூர்) முக்தி தரும் க்ஷேத்திரம் என்று குறிப்பிட்டுள்ளது.
இங்கே வந்து பல ஆண்டுகள் தங்கி வழிபட்டு முக்திபெற்றவர்கள் பிரம்மா,இந்திரன்,சூரியன்,சந்திரன்,தேவர்கள்,திருவாசகர்,சித்தர்களின் தலைவர் அகத்தியர்.

ஆதி சித்தர் காகபுஜண்டர் தனது பாடல்களில்
1.வடவனம்
2.வன்னிவனம் அருள்மிகு வைத்தியநாத சுவாமி
3.திருக்கற்றளீசுவரர் உடையார்
4.திருக்கற்றளீசுவரம் உடைய நாயனார்
5.படிக்காசு வைத்தருளிய நாயனார் என்று பாடியுள்ளார்.

தருமபுரம் ஆதீனத்தை நிறுவியவர் ஸ்ரீலஸ்ரீகுருஞான சம்பந்தர் ஆவார்.இவர் 16 ஆம் நூற்றாண்டில் இந்த ஊரில் மீனாட்சி அம்மைக்கும்,சுப்பிரமணியம் பிள்ளைக்கும் மகனாகப் பிறந்தவர்.இவரது வழிகாட்டுதலால் அக்காலத்தில் அருள்மிகு வைத்தியநாதசுவாமிக்கோவில் பிரபலமடைந்தது.

சூத முனிவர், மடவார்வளாக தலபுராணத்தை சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்தார்,இந்த கோவிலின் ஸ்தலபுராணத்தை பெருமாள்பட்டி வைத்தியலிங்கம் பிள்ளை அவர்கள் தொகுத்தார்;சேத்தூர் சமஸ்தான வித்வான் அருணாசல கவிராயர் அவர்களால் 1902 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது;

“அந்தணர் அன்பர் வாழி அருமறை முறைமை வாழி
செந்தமிழ் புதுமை வாழி சிவன் சிவகாமி வாழி
சந்த வெண்ணீறு வாழி சிவ சமயாதி வாழி
நந்தனலின் மன்னன் வாழி அவன் செங்கோல் நாளும் வாழி”
என்பது சூதக முனிவரின் பாடல் ஆகும்.

சனிபகவானுக்கு இங்கே தனி சன்னதி இருக்கிறது.இந்த கோவிலின் ஸ்தல விருட்சம் வன்னி மரம் ஆகும்.சனி பகவானின் சமித்துவே வன்னி தான்! எனவே,இங்கே வந்து ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் சனியினால் ஏற்படும் துன்பங்கள் தீரும்.

Leave a Reply