மடவார்வளாகம், திருவில்லிபுத்தூர்

மடவார்வளாகம் அருள்மிகு சிவகாமி அம்மன் உடனுறை அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவில், திருவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டத்தின் பெரிய சிவஸ்தலம்….
ஆடல் பாடல்களால் இறைவனுக்குத் தொண்டு செய்து வாழ்ந்த இரு பெண்களுக்கு பொன்னும் பொருளும் இருக்க வீடும் கிடைக்கச் செய்தருளி திருவிளையாடல் நிகழ்த்திய தலம் என்பதால் மடவார்வளாகம் என பெயர் பெற்றது.

(மடவார் – பெண்கள்,

வளாகம் – இருப்பிடம்)
மன்னர் திருமலை நாயக்கருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட, பல்லக்கில் இத்தலம் வந்து வழிபட்டவுடன் வலி தீர்த்தமையால் பல்லக்கை விட்டுவிட்டு நடந்தே மதுரைக்கு சென்றுள்ளார்.

அன்று முதல் இத்தல பூஜை முடிந்த மணியோசை கேட்ட பிறகு தான் உணவருந்தி இருக்கிறார்.

எனவே ஆலாட்சி மணிகளின் ஒலி கேட்பதற்காக சாலை நெடுகிலும் மணி மண்டபங்கள் / முரசு மண்டபங்கள் எழுப்பியுள்ளார். இங்கிருந்து மதுரை செல்லும் வழியில் சிதிலமடைந்த நிலையில் இருக்கும் சில பழைய மண்டபங்களை இன்றும் நாம் காணலாம்.
புரட்டாசி மற்றும் பங்குனி மாதம் முதல் நாளன்று காலை சூரியனின் கதிர்கள் மூலவரின் மீதுபடுவது தலத்தின் மற்றுமொரு சிறப்பு….
தரிசிக்கவேண்டிய தலம்.
திருச்சிற்றம்பலம்

Leave a Reply