புனிதவெள்ளி!!!!!

??உலக வரலாற்றில் மிக முக்கியமான நாள் “பெரிய வெள்ளி’ ,ஆங்கிலத்தில் “குட் பிரைடே’ எனக் கொண்டாட்ப்படுகிறது…

?இயேசு உயிர்துறந்த நாளுக்கு முன்புள்ள நாற்பது நாட்கள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் சுகபோகத்தைத் துறந்து உபவாசம் மேற்கொள்கிறார்கள்.

?பெண்கள் ஆடம்பரத்தையும் அலங்காரத்தையும் தவிர்த்து, அர்ப்பண வாழ்வை நடத்துகிறார்கள். மங்கல நிகழ்ச்சிகளையும் நடத்துவதில்லை.

?சுக போகத்தை ஒதுக்குவதால் மிச்சப்படும் பணத்தை ஏழைகளுக்கு உதவி, புண்ணியம் சம்பாதித்துக் கொள்கிறார்கள்.

?�சீடர்களால் அவர் காட்டிக்கொடுக்கப்பட்டதை “பெரிய வியாழன்’ என்றும், அவரது மரண நாளை “புனித வெள்ளி’ என்றும் நினைவு கூறப்படுகிறது,,

?ஒருவர் செய்யும் தவறுகளுக்கு வேறொருவர் தண்டனை ஏற்கும் நிலை வந்தால் அவரை “பலிஆடு’ என குறிப்பிடுவார்கள்..

?பாவங்களுக்காக ஆடு மரித்ததன் மூலம் தன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ எனக்கூறி மன ஆறுதல் பெறுகிறார்கள்..

?அந்த வகையில் இயேசுகிறிஸ்து உலக மக்களின் பாவத்தினை ஏற்று தன்னையே சிலுவை மரத்தில் பலியாக தந்ததால், “இயேசு கிறிஸ்து உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி’ என பைபிளில் கூறப்பட்டுள்ளது.

?மக்கள் எல்லாருக்காகவும், அவர்களின் பாவங்களுக்காகவும் பலி ஆடாக இயேசு அவர்கள் பாவங்களை தன்மேல் ஏற்று, தன் ஜீவநாடகத்தை முடித்ததன் மூலம் மக்கள் அனைவரின் பாவங்களுக்கும் பரிகாரமானார்.

?புனிதவெள்ளி நாளில் பாவம் இல்லாத உலகை உருவாக்க உறுதியேற்கிறார்கள்..

?இயேசு உயிர்த்தெழுந்தார், இன்றும் ஜீவிக்கிறார் என்ற நம்பிக்கையுடன் ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது

??இந்த மனித உடம்புக்குள் ஒலி காது வழியாகப் புகுகிறது. ஓளி கண் வழியாகப் புகுகிறது. சுவை நாக்கு வழியாகப் புகுகிறது. மணம் மூக்கு வழியாகப் புகுகிறது. ஆனால் அன்பு மட்டும் உடலின் எல்லாப் பாகங்களின் வழியாகவும் புகுகிறது. அன்பை உணர்ந்தவர் ஆண்டவனை அறிந்திருப்பார்.

அன்பே கடவுள் .

??????இன்று புனித வெள்ளி கொண்டாடும் அனைத்து கிறிஸ்தவ நண்பர்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் இனிய புனிதவெள்ளி தின வாழ்த்துக்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை
—   சுபா ஆனந்தி பக்கம்

Leave a Reply