பல்லியைக்_கொல்லக்_கூடாது

​#பல்லியைக்_கொல்லக்_கூடாது_என்று
 #கூறப்படுவதற்கான_வியப்பூட்டும்
#காரணங்கள்…………!!!
 

🌹🍀எந்த ஓர் உயிரினம் இவ்வுலகில் வாழ வேண்டும் என்றாலும், அதற்கு மற்றொரு ஜீவராசியின் துணை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.🍀🌹
🌹🍀இதில் பல்லிகளும் ஒன்றாகும், இதுக் கொல்லப்படக் கூடாத விலங்காக நம் இந்திய கலாச்சாரத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.🍀🌹
🌹🍀இதற்கான காரணங்கள் பலவகையாக கூறப்படுகிறது…🍀🌹
#இந்திய_பாரம்பரியம்
🌹🍀ஆரம்பம் முதலே நமது இந்திய பாரம்பரியத்தில், புராணங்களில் விலங்குகளை கொல்வது தீமை விளைவிக்கும் என்று கூறப்பட்டு 

வருகிறது.🍀🌹
🌹🍀சுற்று சூழலின் சமநிலை சீர்கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி சில வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.🍀🌹
🌹🍀#இந்திய_புராணங்கள்🍀🌹 :
🌹🍀கடவுள் மனிதர்களோடு உரையாட பல வழிகளை கொண்டுள்ளார் என்று நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது.🍀🌹
🌹🍀அதில் பல்லியும் ஒன்றென கூறப்படுகிறது. நமது முன்னோர்கள் மற்றும் கடவுள் நமது இல்லத்தை பல்லியின் உருவில் தான் வருகை தருகிறார்கள் எனவும், பூஜை அறைகளில் இருந்து முக்கியமான தருணங்களில் நமக்கு நல்லது, கெட்டது வரும் போது எச்சரிக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.🍀🌹
🌹🍀#கடவுளின்_செய்தியாளன் : 🍀🌹
🌹🍀நமது இதிகாசங்களில் பல்லி கடவுளின் தூதர் அல்லது செய்தியாளன் என்று கூறப்பட்டுள்ளது.🍀🌹
🌹🍀இது கடவுளிடம் இருந்து நல்லது மற்றும் கெட்டது நடக்கவிருக்கும் செயல்கள் குறித்த செய்திகளை மனிதர்களிடம் கொண்டுவந்து சேர்க்கிறது என்று கருதப்படுகிறது.🍀🌹
🌹🍀கடவுள் மற்றும் மனிதர்களிடையே இது தகவல் தொடர்பு ஏற்படுத்துகிறது என்ற நம்பிக்கை முன்னாளில் இருந்துள்ளது.🍀🌹
🌹🍀#வரதராஜன்_சுவாமி_கோவில்:🍀🌹
#காஞ்சிபுரத்தில்_இருக்கும்_வரதராஜ_சுவாமி #கோவிலில்_கர்பக்ரத்தில்_மேல்_கூரையில் #தங்கம்_மற்றும்_வெள்ளியில்_பல்லி #உருவங்கள்_இடம்பெற்று_இருக்கின்றன.
#இதை_தொட்டு_வணங்குவது_சிறப்பிற்கு #உரியதாக_கருதப்படுகிறது. இந்த #பல்லிகள்_இரண்டும்_காந்தர்வர்கள் என்று கூறப்படுகிறது.🍀🌹
🌹🍀இவர்கள் இறைவனிடம் வரம்பெற்று இக்கோயிலை கட்ட உதவினார்கள் என்ற கூற்றுகளும் நிலவி வருகின்றன.🍀🌹
#அடையாளச்_செய்தி :
🌹🍀நமது சாஸ்திரங்களில் ஒன்றாக கூறப்படுவது தான் பல்லி அல்லது கௌளி சாஸ்திரம்.🍀🌹
🌹🍀நமது உடல் பாகங்களில் பல்லி விழும் இடத்தை வைத்து நமது நேரத்தை பற்றியும், நடக்கவிருக்கும் நல்லது, கெட்டது பற்றியும் தெரிந்துக் கொள்ள முடியும்.🍀🌹
🌹🍀இது ஒருவகையான அடையாளச் செய்தியாக அறியப்படுகிறது. இதனாலும் கூட பல்லியை கொல்லக் கூடாது என்று கூறுவது உண்டு.🍀🌹
🌹🍀கோவில்களில் வணங்கப்படும் பல்லிகள் :

ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலில் பல்லி வணங்கப்படுகிறது.🍀🌹
🌹🍀கடவுளை தரிசித்த பிறகு சுவற்றில் இருக்கும் பல்லி உருவத்தை வணங்குவதால் மங்களகரமான செயல் (அ) நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது…🍀🌹
🌹🍀#ஓம்_நமோ_நாராயணா …!!”🍀🌹

Leave a Reply