தினம் ஒரு திருக்கோவில்

🙏🏽 *தினம் ஒரு திருக்கோவில்:*🙏🏽
👑 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண சிறப்பு பகுதி… 👑
🎠⛱🎠⛱ *BRS*🎠⛱🎠⛱🎠
*பூலோக கைலாசம் ;  பெயரைக் கேட்டாலோ, சொன்னாலோ முக்தி கிடைக்கும் ஸ்தலம் ; விநாயகரின் நான்காவது படை வீடு ; அம்மனின் சக்தி பீடம் ; சிவனின் பாதத்தை தரிசிக்க சிறந்த அதி அற்புதமான சிவத்தலம்..*
🏕🏝🏕🏝 *BRS*🏕🏝🏕🏝🏕
*அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை*
🗼🎡🗼🎡 *BRS*🗼🎡🗼🎡🗼
மூலவர்:  *மீனாட்சி சுந்தரேஸ்வரர், சொக்கநாதர், சோமசுந்தரர்*
அம்மன்/தாயார்: *மீனாட்சி, அங்கயற்கண்ணி*
தல விருட்சம்: *கடம்ப மரம்*
தீர்த்தம்: *பொற்றாமரைக் குளம், வைகை, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி*
ஆகமம்/பூஜை : *காரண ஆகமம்*
பழமை: *2000-3000 வருடங்களுக்கு முன்*
புராண பெயர்: *ஆலவாய், கூடல், நான்மாடக்கூடல், கடம்பவனம்*
ஊர்: *மதுரை*
பாடியவர்கள்: *சம்பந்தர், திருநாவுக்கரசர்*

     

🅱 *தேவாரப்பதிகம்:*🅱
*மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர்வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே.* – திருஞானசம்பந்தர்
🌼 *தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுதலங்களில் இது முதலாவது தலம்.*
🅱 *திருவிழா:*🅱

     

🍁 சித்திரை மாதம் நடக்கும் சித்திரைத் திருவிழாவின் போது மீனாட்சி திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், தேர் ஆகியவை மிகவும் புகழ்பெற்றவை.
🍁 நவராத்திரி, ஆவணி மூல திருவிழா , தை மாதத்தில் தெப்பத் திருவிழா தை மாதம், ஆடிப்பூரம்.
🍁 இது தவிர மாதந்தோறும் திருவிழாக்கள் நடந்த வண்ணமாக இருக்கும்.
🍁 இவை தவிர பொங்கல், தீபாவளி, தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு தினங்கள், விநாயகர் சதுர்த்தி ஆகிய முக்கிய விசேஷ தினங்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.

     

🅱 *தல சிறப்பு:*🅱 

     

 👉🏽 இங்குள்ள சுந்தரேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 
👉🏽 சுந்தரேஸ்வரருக்கு மேல் உள்ள இந்திர விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது.
👉🏽 இந்திரன்  தன் கொலை பாவத்தை போக்க இத்தல  சுயம்புலிங்கத்தை கண்டு பூசித்து வழிபட பாவம் நீங்கியது. 
👉🏽 மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக்கல்லால் ஆனது.
👉🏽 18 சித்தர்களில் சுந்தரானந்த சித்தர் பீடம் இது.
👉🏽 தமிழ்நாட்டில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற பெயருடைய 366 கோயில்களில் முதன்மையானது. 
👉🏽 திருக்குறளின் பெருமையை நிலை நாட்டி சங்கப்பலகை தோன்றிய இடம்.
👉🏽 பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற ஸ்படிக லிங்கம்,இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது. . 
👉🏽 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 192 வது தேவாரத்தலம் ஆகும்.
👉🏽 அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ராஜமாதங்கி சியாமள சக்தி பீடம் ஆகும்.
👉🏽 சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் இத் திருத்தலமும் ஒன்று.
👉🏽 இது ஐம்பெரும் சபைகளில் ரஜத [வெள்ளி] சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும்.
👉🏽 மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராஜர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்.
👉🏽 சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் சிவலிஙகத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார்.
👉🏽 சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும். எனவே இதற்கு  மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு. இது குறித்து திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

    

🅱 *திறக்கும் நேரம்:*🅱 

     

🔑 *காலை 5.00 மணி முதல் பகல் 12.30 மணி வரை. மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை.*🔑
பூஜைவிவரம் :  *ஆறுகால பூஜை.*
🅱 *பொது தகவல்:*🅱 
⛱ *மீனாட்சி அங்கயற்கண்ணி:* ⛱
🌺 இங்குள்ள அம்மனின் பெயர் மீனாட்சி. தமிழில் அங்கயற்கண்ணி. மீன் போன்ற விழிகளை உடையவள் என்பது பொருள். மீன் தனது முட்டைகளைத் தன் பார்வையினாலேயே தன்மயமாக்குவதைப்போல அன்னை மீனாட்சியும் தன்னை தரிசிக்க வரும் அடியவர்களை தன் அருட்கண்ணால் நோக்கி மகிழ்விக்கிறார்.
🌺 மீன் கண்ணுக்கு இமையில்லாமல் இரவும் பகலும் விழித்துக் கொண்டிருப்பது போல தேவியும் கண் இமையால் உயிர்களை எப்போதும் காத்து வருகிறார்.
🌺 அன்னை மீனாட்சிக்கு பச்சைத்தேவி, மரகதவல்லி, தடாதகை, அபிடேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப்பிராட்டி, மதுராபுரித்தலைவி, மாணிக்கவல்லி, மும்முலைத் திருவழுமகள் போன்ற பெயர்களுடன் இன்னும் பல பெயர்களும் உள்ளன.
⛱ *கால் மாறி ஆடிய நடராஜர்:*⛱
🌺 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், நடராஜர் சபைகளில், வெள்ளி சபையாக வருணிக்கப்படுகிறது.
🌺 சுவாமி சன்னிதியில் நுழைந்தவுடன் நடராஜர் இடதுகால் ஊன்று வலது கால் தூக்கி நடனமாடியபடி காட்சி தருகிறார். எல்லா ஆலயங்களிலும் நடராஜர் வலது காலை ஊன்றி இடதுகாலை தூக்கியபடியே காட்சியளிப்பார். இங்கு அவர் வலது காலை தூக்கி ஆடும் நிலையில் காணப்படுகிறார்.
🌺 ஒரு முறை மதுரையை ஆண்ட பாண்டியன், நடனக் கலையை படித்து முடித்துவிட்டு, இத்தல நடராஜரை வழிபட்டு நன்றி சொல்வதற்காக வந்தான். அப்போது, *‘இறைவா! நடனம் கற்பது என்பதே மிகக் கடினமான ஒன்றாக இருக்கும் போது, நீயோ காலம் காலமாக வலதுகால் ஊன்றி, இடது கால் தூக்கி ஆடிக்கொண்டிருக்கிறாய். எனக்காக கால் மாறி ஆடி அருளக்கூடாதா ?’* என்று வேண்டினான். அதன்படியே பாண்டியனுக்காக கால்மாறி ஆடினார் நடராஜர். 
இந்நிகழ்ச்சி பரஞ்சோதி முனிவர் எழுதிய சிவனின் 64 திருவிளையாடலில் கூடற்காண்டத்தில் 24வது படலமாக *”கால் மாறி ஆடிய படலம்’* 6வது திருவிளையாடலாக வருகிறது.
🐲 *வெளி ஆவரணமும் உள் ஆவரணமும் :* 🐲
🌺 மதுரையில் கோயிலுக்கு வெளியில் நான்கு திசைகளிலும் நான்கு புகழ் பெற்ற ஆலயங்கள் உள்ளன. இவை நகருக்கு உள்ளே இருப்பதால் *உள் ஆவரணம்* எனப்படும்.
🌺 மதுரைத்தலத்திற்கு வெளியில் உள்ள நான்கு திருத்தலங்கள் வெளி ஆவரணம் எனப்படும். மதுரைக்குத் தெற்கில் திருப்பரங்குன்றமும் மேற்கில் திருவேடகமும் வடக்கில் திருவாப்பனூரும் கிழக்கில் திருப்புவனமும் உள்ளன. இவை வெளி ஆவரணமாகும்.
🌺 இதுபோல மதுரைத் தலத்திற்குள்ளாக உள்ள திருக்கோயில்கள் உள் ஆவரணம் ஆகும். வடக்கு திசையில் குபேரன் வழிபட்ட பழைய சொக்கநாதர் கோயில், மேற்கு திசையில் சிவபெருமானே தன்னைத்தான் அர்ச்சித்த மூர்த்தியாக வழிபட்ட இம்மையில் நன்மை தருவார் கோயில், கிழக்கு திசையில் வெள்ளை யானை வழிபட்ட ஐராவத நல்லுர் முக்தீசுவரர் கோயில், தெற்கில் எமன் வழிபட்ட தென்திருவாலவாய்க் கோயில் ஆகியவை நகருக்கு உள்ளே அமைந்த உள் ஆவரணக் கோயில்களாகும்.
🅱 *பிரார்த்தனை:*🅱 

     

🌿 மீனாட்சியம்மனை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன் கூடிய வாழ்க்கை அமையும்.
🌿 கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை அம்பாளை வேண்டினால் அமைகிறது.
🌿 வேண்டும் வரமெல்லாம் தரும் அன்னையாக மீனாட்சி இருப்பதால் இத்தலத்தில் பக்தர்கள் தங்கள் எல்லாவிதமான வேண்டுதல்களையும் அம்பாளிடம் வைக்கின்றனர்.
🌿 இங்குள்ள இறைவன் சொக்கநாதரை வணங்கினால் மனதுக்கு அமைதியும் கிடைம்கும், முக்தியும் கிடைக்கும்.
🌿 இங்குள்ள சுவாமி பிராகரத்தில் அமர்ந்து தியானம் செய்யலாம், அத்தனை அமைதி வாய்ந்த ஒம் என்ற நாதம் மட்டுமே நம் காதுகளுக்கு ஒலிக்கும் அளவுக்கு மிகவும் நிசப்தமான பிரகாரம் அது.
🌿 தவம், தியானம் செய்ய ஏற்ற தலம் இது.
🅱 *நேர்த்திக்கடன்:*🅱 

     

☀ சுவாமிக்கு பால், எண்ணெய், இளநீர் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம்.
☀ விரதம் இருத்தல், தானதருமம் செய்தல், வேள்வி புரிதல், தவம் செய்தல், தியானம் செய்தல் ஆகியவை இத்தலத்தில் செய்தால் பன்மடங்கு புண்ணியம் கிடைக்கும். அத்தனை சிறப்பு வாய்ந்த சிவத்தலம்.
☀ அம்பாளுக்கு பட்டுப்புடவை சாத்துதல், சுவாமிக்கு உலர்ந்த தூய ஆடை அணிவித்தல், தங்களால் முடிந்த அபிஷேக ஆராதனைகள் இங்கு இறைவனுக்கும், அம்மனுக்கும் பக்தர்களால் செலுத்தப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம். 
☀ சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். சங்காபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவற்றை செய்யலாம். தவிர யாகம் செய்தும் வழிபடலாம்.

     

🅱 *தலபெருமை:*🅱
🦋 உலகப்புகழ் பெற்ற சிவாலயம்.
🦋 பாண்டிய மன்னனாக அங்கயற்கண்ணியாம் அன்னை மீனாட்சி அம்பிகை பிறந்து நல்லாட்சி செய்யும் பதி.
🦋 சிவபெருமான் 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய தலம்.
🦋 கால் மாறி ஆடிய தலமும் இதுவே.
🦋 சிவனே எல்லாம் வல்ல சித்தராக எழுந்தருளியிருக்கும் அதி அற்புத தலம்.
🦋 தென்னாடுடைய சிவனே போற்றி என சிவபக்தர்களால் மனமுருக கூறும் சுலோகம் அமைய காரணமான சிவத்தலம்.
🦋 இந்திரன் வருணன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம்.
🦋 இது சிவதலம் என்றாலும் கூட 64 சக்தி பீடங்களுள் மீனாட்சி பீடம் முதல் பீடத்தைப் பெற்றுள்ளதால் எல்லா பூஜைகளும் அன்னை மீனாட்சிக்கு முடிந்த பிறகே சிவபெருமானுக்கு நடைபெறுகின்றன.
🦋 ஈசனே தருமி என்ற புலவருக்காக இறையனாராக வந்து தமிழை ஆராய்ந்த இடம்.
🦋 நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்டதலம்.
🦋 நக்கீரர் வாழ்ந்த இடம்.
🦋 முருகன் திருவருளால் ஊமைத் தன்மை நீங்கிய குமரகுருபரர் மீனாட்சி பிள்ளை தமிழ் அரங்கேற்றியதும், திருவாதவூராருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை கொடுத்ததும், இத்தலத்தில் தான்.
🦋 பாணபத்திரருக்கு பாசுரம் எழுதிக்கொடுத்து சேரனிடம் இறைவன் நிதி பெற வைத்த தலம்.
🦋 இராமர், லட்சுமணர் மற்றும் பிற தேவர்களும் முனிவர்களும் பூசித்துப் பேறு பெற்ற தலம்.
🦋 திருஞானசம்பந்தர் அனல் வாதம், புனல் வாதம் செய்து சைவத்தை பாண்டிநாட்டில் நிலைபெறச் செய்த தலம்.
🦋 பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற பெருமான் வாழும் இடம்.
🦋 எப்போதும் திருவிழாக்கள் நடந்த வண்ணமே இருக்கும் சிறப்பு வாய்ந்த தலம்.
🦋 பல புராண இலக்கியங்களையுடையது இத்தலம்.
🦋 கலையழகும், சிலைவனப்பும், இசையமைப்பும் ஆயிரக்கணக்கான அழகிய சுதைகளையும் கொண்ட வானுயர்ந்த கோபுரங்களைக் கொண்டது.
🦋 ஆண்டுதோறும் திருவிழா நடக்கும். அம்மையும் அப்பனும் வீதியில் வருவதும், அண்டிய அன்பருக்கு இன்பமே தருவதும் மதுரையில் காலம் காலமாக நடந்து வருவதாகும்.
🦋 தாமரை மலர்போல் மதுரைப்பதியின் அழகும், நடுவிலுள்ள மொட்டுப் போன்ற மீனாட்சியின் ஆலயமும், மலரிதழ் போன்ற வரிசையான தெருக்களும் சேர்ந்து மதுரையைச் சிவராஜதானி என்று போற்றச் செய்துள்ளன.
🦋 நவக்கிரக ஸ்தலத்தில் புதன் ஸ்தலமாகும்.
🔥 *பொற்றாமரைக்குளம் :* 🔥
🦋 நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுகோளின்படி சிவன் தமது சூலத்தால் பூமியில் ஊன்றி உண்டாக்கியதே இந்தக் குளம் . கோயிலுக்குரிய தீர்த்தங்களில் முதன்மையானது. சிவகங்கை என்றும் பெயர். இந்திரன் தான் பூஜிப்பதற்கு பொன் தாமரையைப் பெற்ற இடம். இந்தக்குளத்தில் அமாவாசை, மாதப் பிறப்பு, கிரகணகாலம், வியதிபாதம் ஆகிய புண்ணிய காலங்களில் நீராடி இறைவனைப் பூஜித்தால் வேண்டும் சித்திகளைப்பெறலாம் என்பது ஐதீகம்.
🍁 இக்குளத்தை சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. திருக்குறளின் பெருமையை நிலை நாட்டி சங்கப்பலகை தோன்றிய இடம். இங்கு ஸ்படிக லிங்கம் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. 
🐘 *முக்குறுணி விநாயகர் :* 🐘
🎠 ஒரு முறை திருமலை நாயக்கருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. வலி நீங்க மீனாட்சிக்கு தெப்பக்குளம் கட்டுவதாக நேர்ந்து கொண்டாராம். அப்படி தெப்பக்குளம் தோண்டும் போது பிரம்மாண்டமான பிள்ளையார் கிடைத்தார். அவரை சுவாமி சன்னதி செல்லும் வழியில் தெற்கு நோக்கியபடி *”முக்குறுணி விநாயகர்’* என்ற திருநாமத்துடன் பிரதிஷ்டை செய்தனர்.
⚜ இவருக்கு விநாயகர் சதுர்த்தியன்று 18 படி அரிசியில் ஒரே கொழுக்கட்டையாக செய்து படைக் கிறார்கள்.
🐲 இது விநாயகரின் நான்காவது படை வீடாகும்.
🌤 *தலத்தின் பெயர் காரணங்கள் ::* 🌤
🕊 சிவபெருமான் தமது சடையிற் சூடிய பிறையினிடத்துள்ள அமிர்தமாகிய மதுவைத் தெளித்து. நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் மதுரை எனப் பெயர் பெற்றது. 
🕊 சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக்கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது.
🕊 மதுரையை அழிக்க வருணன ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு.
🌺 *மீனாட்சி திருக்கல்யாண வரலாறு:* 🌺
🌷 மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டு விட்டது. நாட்டின் அரசிக்கு திருமணம் என்றால் சும்மாவா? மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர்.
🌷 திருமணத்திற்கு நாள் குறித்த அன்று மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் நிறையவே அப்பிக் கிடந்தது. தனது மணாளனை முதன் முதலாக சந்தித்த அனுபவம் அப்போது அவளை சிலிர்ப்பு கொள்ளச் செய்தது. எட்டு திக்கும் வென்று, இமயத்தையும் வென்றுவர சென்றபோது தான் சிவபெருமானை முதன் முதலாக சந்தித்தாள் மீனாட்சி.
🌷 சிவபெருமானின் பார்வை பதிந்த மாத்திரத்தில் அவளது மூன்று தனங்களில் ஒன்று மறைந்து போயிற்று. அப்போது தான், தன்னுடைய மணாளன் இவரே என்று எண்ணி, நாணினாள். ஒரு நல்ல நாளில் பூலோகம் வந்து மணந்து கொள்வதாக சிவபெருமான் உறுதியளித்ததை இப்போதும் நினைத்து மகிழ்ந்தாள். அப்போது, அவள் ஆவலோடு எதிர்பார்த்த சிவபெருமான் வந்து கொண்டிருந்தார்.
🌷 மகா விஷ்ணு, பிரம்மா மற்றும் தேவர்கள், தேவகனங்களும் உடன் வந்தனர். புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணிகலன்களாகவும் கொண்டு காட்சிதரும் சிவபெருமான் அந்த கோலத்தில் இருந்து மாறியிருந்தார்.
🌷 சுந்தரேசுவரராக-மதுரை மாப்பிள்ளையாக வந்தார். சித்திரையில்  நல்ல நேரம் வந்ததும் மீனாட்சியின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி தனது மனைவியாக ஏற்றுக் கொண்டார்.
🌷 திருமணம் முடிந்ததும் தடபுடலாக விருந்து நடக்குமேப அது மீனாட்சி கல்யாணத்திலும் நடந்தது. மலைபோல் சாதம் சமைக்கப்பட்டது. அதில் ஒரு பகுதி மட்டுமே காலியாகி இருந்தது. இதையறிந்த மீனாட்சி, அதுபற்றி தனது மணாளன் சிவபெருமானிடம் கூறினார். உடனே சிவபெருமான் குண்டோதரர்கள் இருவரை அங்கு வரவழைத்தார்.
🌷 மீதமுள்ள சாதம், பலகாரங்களை சாப்பிடுமாறு அவர்களை பணித்தார். அவர்கள் இருவரும் அடுத்த சில நிமிடங்களிலேயே அத்தனை உணவு வகைகளையும், பலகாரங்களையும் வேகமாக தின்று தீர்த்து விட்டனர். தாகத்தை தணிக்க பெரிய அண்டாக்களில் இருந்த தண்ணீரை மடக் மடக் என்று குடித்தனர்.
🌷 பெரிய அண்டாக்கள் எல்லாம் அவர்களுக்கு சிறிய டம்ளர்கள் போல் இருந்தன.

அந்த தண்ணீர் அவர்களுக்கு போதவில்லை. தாகம்… தாகம்… என்று கத்தினார். அப்போது சிவபெருமான், தன் கையை வைத்து அங்கு ஒரு நதியை உருவாக்கினார். அந்த நதி நீரை குடித்து குண்டோதரர்கள் தாகம் தணிந்தனர். சிவபெருமான் தன் கையை வைத்து உருவாக்கியதால் அந்த நதி *“வைகை’’* ஆயிற்று.
🅱 *கோயில் அமைப்பு :*🅱
🍄 பொதுவாக எல்லா கோயில்களிலும் ஒன்று அல்லது நான்கு வாசல்கள் இருக்கும். ஆனால், இத்தலத்தில் ஐந்து வாசல்கள் உள்ளன. அதாவது கிழக்கு பகுதியில் சுவாமி சன்னதிக்கு ஒரு வாசலும், அம்மன் சன்னதிக்கு ஒரு வாசலும் உள்ளன. இத்தகைய அமைப்பு வேறெங்கும் இல்லை. மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக் கும் தங்கத்தாலான கோபுரங்களும், நான்கு வாசல் பக்கங்களிலும் ராஜ கோபுரங்களும் உள்ளன. இதில் தெற்கு கோபுரம் தான் மிகவும் உயரமானது. உயரம் 160 அடி. இதில் 1511 சுதையால் ஆன சிலைகள் உள்ளன. இதை 1559ல் சிராமலை செவ்வந்தி மூர்த்தி செட்டியார் கட்டினார்.
🍄 மேற்கு கோபுரம் 154 அடி உயரம். 1124 சிலைகள் உள்ள இந்த கோபுரம் பராக்கிரம பாண்டியனால் (1315- 1347) கட்டப்பட்டது. வடக்கு கோபுரம் 152 அடி உயரம். இதனை மொட்டைக்கோபுரம் என்பார்கள். இந்த கோபுரம் கிருஷ்ண வீரப்ப நாயக்கரால் (1564-1572) கட்டப்பட் டது.
🍄 பொற்றாமரைக் குளத்தின் வட புறம் 7 நிலை சித்திரக்கோபுரம்.  இத்துடன் வேம்பத்தூரார் கோபுரம், நடுக்கட்டு கோபுரம், இடபக்குறியிட்ட கோபுரம் என மொத்தம் 14 கோபுரங் கள் உள்ளன.
🎠 *பெண்மைக்கு முக்கியத்துவம் :* 🎠
🌺 அன்னை மீனாட்சி மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் இடைநெளித்து கையில் கிளி ஏந்தி அழகே உருவாக மரகத மேனியாக அருள்பாலிக்கிறார். சுவாமி சுந்தரேஸ்வரர் கருவறையில் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். கடம்பம், வில்வம் இரண்டும் தல விருட்சங்களாக உள்ளன. பொற்றா மரை, வைகை ஆகிய தீர்த்தங்கள் இத்தலத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன. இத்தலத்தை பொறுத்தவரை பெண் மைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், அம்மனின் இடப்பக்கம் சுவாமி வீற்றிருக்கிறார்.
🌺 *மீனாட்சியம்மன் கிளி ரகசியம்:*🌺
🔥 மீனாட்சியம்மன் என்றதுமே கிளி நினைவிற்கு வரும். தன்னை வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை அம்பிகைக்கு, கிளி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்குமாம். மீனாட்சியிடம் கிளி இருப்பதற்கான இன்னொரு காரணத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்திரன் சாப விமோசனத்திற்காக பூலோகம் வந்தபோது இத்தலத்திற்கு வந்தான். அப்போது சொக்கநாதர் லிங்கமாக எழுந்தருளியிருந்த இடத்தின் மேலே பல கிளிகள் வட்டமிட்டபடி அவரது திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு பறந்து கொண்டிருந்தன. இதைக்கண்டு ஆச்சரியமடைந்த இந்திரன், சொக்கநாதரை வணங்கி விமோசனம் பெற்றான். இவ்வாறு இந்திரன் இங்கு சிவவழிபாடு செய்வதற்கு கிளிகள் வழிகாட்டியதன் அடிப்படையில் மதுரை தலத்தில் கிளி முக்கியத்துவம் பெற்று விட்டது.

 

🅱 *தல வரலாறு:*🅱
🌤 மலயத்துவச பாண்டியன் மனைவி காஞ்சனமாலை இருவருக்கும் குழந்தை இல்லாததால் புத்திரகாமேட்டியாகம் செய்தனர். அப்போது உமாதேவி மூன்று தனங்களையுடைய ஒரு பெண் குழுந்தையாக வேள்விக்குண்டத்தினின்று தோன்றினாள். குழந்தையின் தோற்றத்தைக் கண்டு அரசன் வருந்தும் போது இறைவன் அசரீரியாக இக்குழந்தைக்கு கணவன் வரும்போது ஒரு தனம் மறையும் என்று கூறினார். இறைவன் கட்டனைப்படி குழுந்தைக்குத் *”தடாதகை’* எனப்பெயரிடப்பட்டது. 
🌤 குழந்தை சிறப்பாக வளர்ந்து பல கலைகளில் சிறந்து விளங்கியது. மலயத்துவசன் மறைவுக்குப்பின் தடாதகை சிறப்பாக ஆட்சி செய்தாள். கன்னி ஆண்டதால் *”கன்னிநாடு’* எனப் பெயர் பெற்றது.
🌤 தடாதகை மணப்பருவத்தை அடைந்தாள். நால்வகைப் படைகளுடன் புறப்பட்டுச் சென்று திக்விஐயம் செய்து வென்றாள். இறுதியாகத் திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் சிவபெருமானையும் கண்டாள். கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. முன் அறிவித்தபடி இறைவனே கணவன் என்பது புலப்பட்டது.
🌤 திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருமால் முதலிய தேவர்களும் முனிவர்களும் வந்திருந்தார்கள். சிவனுக்கு பக்கத்தில் தடாதகை இருந்ததை காண கண் கொள்ளாக்காட்சியாக இருந்தது. பிரமதேவன் உடனிருந்து நடத்தினார். ஒரு நன்னாளில் சிவபெருமான், திருமங்கல நாணைப் பிராட்டியாருக்குச் சூட்டினார். எல்லோரும் கண் பெற்ற பயனைப் பெற்றனர். தடாதகைப் பிராட்டியே மீனாட்சி அம்மனாக விளங்குகிறார்.
🌤 பெருமான் திருமணஞ் செய்தருளியது, பெருமான் போகியாய் இருந்து, உயிர்களுக்குப் போகத்தை அருளுவதை நினைப்பூட்டும். பின்பு சிவபெருமான் தாம் உலகில் அரசு நடத்திக்காட்ட திருவுளங்கொள்ள, இடபக்கொடி மீன்கொடி ஆகியது. சோமசுந்தரர் சுந்தரபாண்டியனாய்க் கோலங்கொண்டு விளங்கினார். சிவகணங்கள் மானுடவடிவு கொண்டனர். பாண்டியன் கோலம்பூண்ட சுந்தரப் பெருமாள் மக்களுக்கு அரசனாகவும், பகைவர்களுக்கு சிங்கமாகவும், உலக இன்பங்களை வெறுத்த ஞானிகளுக்கு முழுமுதலாகவும் விளங்கினார்.
🅱 *சிறப்பம்சம்:*🅱 

     

🌿 *அதிசயத்தின் அடிப்படையில்:*
👉🏽 இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 
👉🏽 மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம்.
👉🏽 மீனாட்சி அம்மன் அரசியாக இருந்ததால், அபிஷேகங்களை பக்தர்கள் பார்க்க அனுமதி இல்லை. அலங்காரம் செய்த பிறகே பார்க்கலாம். பொற்றாமரைக் குளத்தில் மீன் போன்ற உயிரினங்கள் காணப்படுவதில்லை என்பது ஓர் அதிசயம்.
👉🏽 சிவபெருமான் நடனம் ஆடிய பஞ்ச சபைகளுள் இத்தலம் *ரஜத (வெள்ளி) சபை*யாகும்.
👉🏽 இத்தலத்தில் மட்டும் தான் பாண்டிய மன்னனுக்காக நடராஜர் கால் மாறி இடது கால் தூக்கி சந்தியா தாண்டவம் ஆடியுள்ளார்.
👉🏽 மாரியம்மன் தெப்பக்குளத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் 7 அடி உயர முக்குறுணி விநாயகர் இங்கு அருள் பாலித்து வருகிறார்.
👉🏽 ஒரு நாரைக்கு பெருமான் அருளிய வரத்தின்படி பொற்றாமரைக் குளத்தில் மீன்களும், நீர்வாழ் உயிரினங்களும் இல்லாதிருப்பது இன்றும் ஓர் அதிசயம்.
👉🏽 வடகோபுரத்திற்குப் பக்கத்தில் 5 இசைத் தூண்களும், ஆயிரங்கால் மண்டபத்தில் பல ஒலிகளைத்தரும் சிலைகளும் உள்ளன.
👉🏽 இந்த ஆயிரங்கால் மண்டபம் இங்குள்ள மண்டபங்களில் மிகவும் பெரியது.
👉🏽 இங்கு 985 தூண்கள் உள்ளன. நடுவில் பெரிய நடராஜர் திருவுருவம் உள்ளது.
🅱 *இருப்பிடம்:*🅱
🚗 மதுரை மத்திய பஸ்ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ., மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டிலிருந்து 10 கி.மீ., ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்  உள்ளது. 
❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃

 🌿 *தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்*🌿

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

⛱ இ றை ய ன் பி ல் ⛱
•┈┈• ❀❀ •┈┈• ❀❀ •┈┈• ❀❀ •┈┈•

Leave a Reply