சிலையில் சக்தி

​” அந்த சிலையில் ஏதேனும் சக்தி இருக்குமானால், கண்டிப்பாக விற்க மாட்டேன் ”
 ஒருநாள் சிங்கப்பூரிலிருந்து ஒரு பெரியவர் தன் குடுபத்துடன் வந்து, விநாயகர் சிலை ஒன்று வேண்டும் என்று கேட்டார்… 

….. நான் என்னிடம் தயாராக இருந்த சிலைகளில் பெரியது, நடுத் தரமானது,சிறியது என்று 3 சிலைகளைக் காண்பித்தேன்… 

…… அவர் இந்த 3 சிலைகளில் எதை வீட்டில் வைத்து வழிபட்டால் நல்லது என்று கேட்டார்… 

…. நான் இதில் எதை வைதுக்கும்பிட்டாலும் எனக்குதான் நல்லதே ஒழிய உங்களுக்கு செலவுதான் என்றேன்… 

… வந்தவர் சற்று யோசித்து விட்டு, எப்படி என்று கேட்டார்… 

….நான்,………நீங்கள் எந்த சிலை வாங்கினாலும் அந்தப் பணத்தில் அரிசி வாங்கி சாப்பிடுவேன்… அந்த சிலையில் ஏதேனும் சக்தி இருக்குமானால், கண்டிப்பாக விற்க மாட்டேன் என்றேன்… அவர் சிரித்தபடியே, 3 சிலைகளையும் வாங்கிக்கொண்டார்.

Leave a Reply